போலீஸ் டைரி

Added : நவ 21, 2020
Share
Advertisement
31 தி.மு.க.,வினர் மீது வழக்குதிருத்தணி: திருவாரூர் அடுத்த, திருகுவளையில், தி.மு.க., மாநில இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்ய முயன்ற போது. போலீசார் அவரை கைது செய்தனர். இதை கண்டித்து. திருத்தணி நகராட்சி அலுவலகம் முன், நகர துணை செயலர் ஜி.எஸ்.கணேசன் தலைமையில், 31 பேர் நேற்று முன்தினம் மாலை, சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதையடுத்து, திருத்தணி கிராம நிர்வாக அலுவலர்

31 தி.மு.க.,வினர் மீது வழக்குதிருத்தணி: திருவாரூர் அடுத்த, திருகுவளையில், தி.மு.க., மாநில இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்ய முயன்ற போது. போலீசார் அவரை கைது செய்தனர். இதை கண்டித்து. திருத்தணி நகராட்சி அலுவலகம் முன், நகர துணை செயலர் ஜி.எஸ்.கணேசன் தலைமையில், 31 பேர் நேற்று முன்தினம் மாலை, சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதையடுத்து, திருத்தணி கிராம நிர்வாக அலுவலர் துரைகண்ணன் அளித்த புகாரையடுத்து, திருத்தணி போலீசார், 31 தி.மு.க.,வினர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.மின் ஊழியர் சாலை விபத்தில் பலிநகரி: சித்துார் மாவட்டம், பிச்சாட்டூர் அடுத்த, கீளப்பூடி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமராஜூ, 47. இவர், விஜயபுரம், துணை மின் நிலையத்தில் லைன்மேனாக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம், வேலையை முடித்துக் கொண்டு மின் ஊழியர் கிருஷ்ணமராஜூ, இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்துக் கொண்டு இருந்தார்.கீளப்பூடி அருகே, எதிரே வந்த கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், கிருஷ்ணமராஜூ, பலத்த காயம் அடைந்து, அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே இறந்தார். பிச்சாட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.விபத்தில் ஒருவர் பலிநகரி: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 50. இவர், சித்துார் மாவட்டம், ரங்கராஜபுரம் பகுதியில், அரசு திட்டப் பணியில், கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது, பாறை கல் ஒன்று சரிந்து ஆறுமுகத்தின் மீது விழுந்ததில், பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார்.எஸ்.ஆர்.புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X