பொது செய்தி

தமிழ்நாடு

சுழற்சி முறையில் காவலர்களுக்கு ஒரு நாள் ஓய்வு

Added : நவ 21, 2020
Share
Advertisement
திருவள்ளூர்: மாவட்டத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் முதல், காவலர்களுக்கு சுழற்சி முறையில், வாரத்தில் ஒரு நாள், ஓய்வு அளிக்க, எஸ்.பி., நடவடிக்கை எடுத்துள்ளார்.திருவள்ளூர் மாவட்டத்தில், காவல் உதவி ஆய்வாளர் முதல், காவலர் வரை, என, மொத்தம், 982 பேர் தற்போது பணிபுரிந்து வருகின்றனர்.இவர்களுக்கு, சுழற்சி அடிப்படையில், 15 நாட்களுக்கு ஒருமுறை, ஒரு நாள் ஓய்வு வழங்க வேண்டும்.ஓய்வில்,

திருவள்ளூர்: மாவட்டத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் முதல், காவலர்களுக்கு சுழற்சி முறையில், வாரத்தில் ஒரு நாள், ஓய்வு அளிக்க, எஸ்.பி., நடவடிக்கை எடுத்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில், காவல் உதவி ஆய்வாளர் முதல், காவலர் வரை, என, மொத்தம், 982 பேர் தற்போது பணிபுரிந்து வருகின்றனர்.இவர்களுக்கு, சுழற்சி அடிப்படையில், 15 நாட்களுக்கு ஒருமுறை, ஒரு நாள் ஓய்வு வழங்க வேண்டும்.ஓய்வில், காவலர்கள் தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிட்டு, அவர்களின் மன இறுக்கத்தினை தளர்த்தி எழுச்சியுடன் பணியாற்றுவதற்காக, வாரத்தில் ஒரு நாள் ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என, காவல் உயர் அதிகாரிகள் அறிவுறுத்து இருந்தனர்.அதன் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்டத்தில், 982 காவலர்களில், முதற்கட்டமாக, 125 காவலர்களுக்கு, எஸ்.பி.அரவிந்தன் நேற்று ஒரு நாள் ஓய்வு அளித்தார்.மற்ற காவலர்களுக்கு, வாரத்தில் ஒரு நாள் கிடைக்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது என, எஸ்.பி., அரவிந்தன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X