பொது செய்தி

தமிழ்நாடு

நெற்பயிரில் எலி வெட்டு அதிகரிப்புகட்டுப்படுத்த அதிகாரி ஆலோசனை

Added : நவ 21, 2020
Share
Advertisement
கம்மாபுரம்: கம்மாபுரம் பகுதியில் சம்பா நெற்பயிர்களை கடித்து சேதப்படுத்தும் எலிகளை கட்டுப்படுத்த வேளாண் அதிகாரி ஆலோசனை வழங்கியுள்ளார்.கம்மாபுரம், தேவங்குடி, காவனூர், க.தொழூர், மருங்கூர், சி.கீரனுார், தே.பவழங்குடி, சிறுவரப்பூர், தர்மநல்லுார், வி.சாத்தப்பாடி, ஊ.கொளப்பாக்ம், வி.குமாரமங்கலம், கோபாலபுரம், தர்மநல்லுார் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 19 ஆயிரம் ஏக்கரில்

கம்மாபுரம்: கம்மாபுரம் பகுதியில் சம்பா நெற்பயிர்களை கடித்து சேதப்படுத்தும் எலிகளை கட்டுப்படுத்த வேளாண் அதிகாரி ஆலோசனை வழங்கியுள்ளார்.கம்மாபுரம், தேவங்குடி, காவனூர், க.தொழூர், மருங்கூர், சி.கீரனுார், தே.பவழங்குடி, சிறுவரப்பூர், தர்மநல்லுார், வி.சாத்தப்பாடி, ஊ.கொளப்பாக்ம், வி.குமாரமங்கலம், கோபாலபுரம், தர்மநல்லுார் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 19 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்து, நெற்பயிர்கள் செழிப்பாக வளர்ந்துள்ளன. வயலில் எலிகள் அதிகரித்து, நெற்பயிர்களை சேதமாக்குகின்றன.இதனால், விவசாயிகள், வயலில் கிட்டி, எலிப்பொரி வைத்தும், புகை மூட்டம் போட்டும் எலிகளைப் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுகின்றனர்.கம்மாபுரம் வட்டார வேளாண் விரிவாக்க மைய உதவி இயக்குனர் சுதமதி கூறியது:'வட்டாரத்தில் சாகுபடி செய்த நெல், வேர்க்கடலை, கரும்பு, உளுந்து, பச்சை பயிரை சேதமாக்கும், எலிகளை கட்டுப்படுத்த வயலில் இரு நாட்களுக்கு நச்சு கலப்பில்லாத உணவுப் பொருட்களை வைத்து, எலிகளின் நடமாட்டத்தை அறிந்து, அங்கு 100 கிராம் அரிசி பொறியில் ஒரு கிராம் சமையல் எண்ணெய், 2 கிராம் சிங்க்பாஸ்பேடு நச்சு மருந்து கலந்து வைக்கலாம். அதே போல், நெற்பயிரில் ஏக்கருக்கு 25 தஞ்சாவூர் கிட்டிகள் வைத்து எலிகளை கட்டுப்படுத்தலாம். பறவைகள் மற்றும் ஆந்தைகள் அமரும் விதமாக 'டி' வடிவ குச்சிகளை வைத்தும் கட்டுப்படுத்தலாம்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X