பொது செய்தி

தமிழ்நாடு

'கொடுமணல் அகழாய்வு தமிழுக்கு முக்கியமானது'

Added : நவ 21, 2020
Share
Advertisement
சென்னை:''கொடுமணலில் நடைபெற்ற அகழாய்வு, தமிழ் மொழிக்கு மிக முக்கியமானது,'' என, மத்திய தொல்லியல் துறையின், சென்னை வட்டார கண்காணிப்பாளர் ஸ்ரீராமன் பேசினார்.'ரீச் பவுண்டேஷன்' சார்பில், உலக தொல்லியல் வார இணைய வழி கருத்தரங்கம் நடந்தது. தொல்பொருட்கள்அதில், மத்திய தொல்லியல் துறையின், சென்னை வட்டார கண்காணிப்பாளர் ஸ்ரீராமன், 'கொடுமணல் அகழாய்வின்

சென்னை:''கொடுமணலில் நடைபெற்ற அகழாய்வு, தமிழ் மொழிக்கு மிக முக்கியமானது,'' என, மத்திய தொல்லியல் துறையின், சென்னை வட்டார கண்காணிப்பாளர் ஸ்ரீராமன் பேசினார்.'ரீச் பவுண்டேஷன்' சார்பில், உலக தொல்லியல் வார இணைய வழி கருத்தரங்கம் நடந்தது.


தொல்பொருட்கள்

அதில், மத்திய தொல்லியல் துறையின், சென்னை வட்டார கண்காணிப்பாளர் ஸ்ரீராமன், 'கொடுமணல் அகழாய்வின் முக்கியத்துவம்' என்ற தலைப்பில் பேசியதாவது:மத்திய தொல்லியல் துறை சார்பில், 2018ல், ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஒன்றியத்தில் உள்ள கொடுமணலில், என் தலைமையிலான குழு அகழாய்வு செய்தது. அதில், ஆயிரக்கணக்கான தொல்பொருட்கள் கிடைத்தன.

அவற்றில், தமிழ் பிராமி எழுத்துகள் உள்ள பானை ஓடுகள் மட்டுமே, 350க்கும் மேல் கிடைத்தன. 'அ, ஆ, இ, ஈ' என்னும் எழுத்துள்ள ஓடுகளும் கிடைத்தன. இது, கற்பிப்பதற்கானவையாக இருக்கலாம்.இதற்கு முன்வரை, தமிழில், 'ஆ, ஈ' என்னும் நெடில் எழுத்துகள் இல்லை என்னும் கருத்தை தான், ஆய்வாளர்கள் கூறி வந்தனர். ஆனால், தமிழில் நெடில் எழுத்துகள் இருந்தன என்பதற்கு, கொடுமணல் அகழாய்வு பதில் சொல்லியுள்ளது. மேலும், செம்பால் ஆன, நாய் உள்ளிட்ட உருவங்களும் கிடைத்துள்ளன.

மதுரை உயர் நீதிமன்ற கிளையின் உத்தரவுப்படி, தமிழ் பிராமி எழுத்துகள் உள்ள பானை ஓடுகள், அமெரிக்காவின் பீட்டா ஆய்வகம் மற்றும் டில்லியில் உள்ள, இந்திய அரசு ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. முக்கியமான தரவுஅவற்றின் முடிவுகள் வந்தபின், அசோகர் பிராமி எழுத்துகளுக்கு முன், தமிழர்கள் எந்த நுாற்றாண்டில் இருந்து, எழுத்து முறையை அறிந்தனர் என்பதற்கான சான்றாக இருக்கும்.

மேலும், கொடுமணல் அகழாய்வு முடிவுகள்,தமிழுக்கு மிக முக்கியமான தரவுகளை கொடுக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.நிகழ்ச்சியில், 'ரீச் பவுண்டேஷன்' நிறுவனர் சத்தியமூர்த்தி துவக்க உரை ஆற்றினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X