பொது செய்தி

தமிழ்நாடு

நெய்வேலி சட்டபை தொகுதியில் பா.ம.க., கூட்டம்

Added : நவ 21, 2020
Share
Advertisement
நெய்வேலி: நெய்வேலி சட்டசபை தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் முப்படைகள் சந்திப்பு கூட்டம்இணைய வழியில் நடந்தது.பா.ம.க.,மாவட்டச் செயலாளர் பொறியாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர்கள் செல்வ குமார், சிவக்குமார், மணிவாசகம், தங்கவேல், செல்வகுமார், நகரச் செயலாளர்கள் வெங்கடேசன், ரவிசங்கர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில்பா.ம.க., இளைஞரணித் தலைவர் அன்புமணி

நெய்வேலி: நெய்வேலி சட்டசபை தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் முப்படைகள் சந்திப்பு கூட்டம்இணைய வழியில் நடந்தது.பா.ம.க.,மாவட்டச் செயலாளர் பொறியாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.

ஒன்றியச் செயலாளர்கள் செல்வ குமார், சிவக்குமார், மணிவாசகம், தங்கவேல், செல்வகுமார், நகரச் செயலாளர்கள் வெங்கடேசன், ரவிசங்கர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில்பா.ம.க., இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று பேசினார். நெய்வேலி தொகுதிபொதுமக்கள் மாற்று குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு தனிப்பட்டா வழங்க வேண்டும். என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தை சுற்றியுள்ள கிராம இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.(சி.எஸ்.ஆர்) சமூக பொறுப்புணர்வு திட்ட நிதியைபாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு செலவு செய்யாமல் வெளி மாநிலத்திற்கு செலவு செய்வதாக புகார் தெரிவித்தனர். வரும் சட்டசபை தேர்தலில்நெய்வேலி தொகுதியில் அன்புமணி ராமதாஸ் போட்டியிட வேண்டும் வலியுறுத்தினர்.

வன்னியர்களுக்கு தனியாக 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பல மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.கூட்டத்தில் பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி, சொத்துபாதுகாப்புக் குழுத் தலைவர் மருத்துவர் கோவிந்தசாமி, மாநில சமூக முன்னேற்ற சங்கத் தலைவர் சிவப்பிரகாசம், முன்னாள் எம்.பி., தன்ராஜ்,மாநில இணை பொதுச்செயலர் இசக்கி, மாநில அமைப்பு செயலாளர் பேராசிரியர் செல்வகுமார், மாநில துணை பொதுச் செயலாளர்கள் முத்துகிருஷ்ணன், அசோக்குமார், மாவட்டச் செயலர்கள் கோபிநாத், கார்த்திகேயன், சசி குமார், பாண்டியன் பங்கேற்றனர்.

மேலும் மாநில துணை தலைவர்கள் முத்து வைத்திலிங்கம் முருகவேல் முன்னாள் மாவட்ட செயலர்கள் ஜெகன், ஆறுமுகம், நெடுஞ்செழியன், மகளிரணிநிர்வாகிகள் சிலம்புச் செல்வி, தேவ சுந்தரி, சுஜாதா, விஜய பார்வதி, அருள்புஷ்பா, வினோதினி, மகேஸ்வரி, இளைஞரணி பொறுப்பாளர்கள் ராஜேந்திரன், விஜயராகவன், தவநாதன், விஜய், வேலு, வசந்த், முருகானந்தம், ரஞ்சித், மாயகிருஷ்ணன்பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X