வடவள்ளி கருப்பராயன் கோவிலில் சம்பளம் இன்றி ஊழியர்கள் அவதி

Added : நவ 21, 2020
Share
Advertisement
கோவை:வடவள்ளி கருப்பராயன் கோவிலில் பணிபுரியும், பத்து கோவில் பணியாளர்களுக்கு, கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால், கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.கோவை மருதமலைசெல்லும் சாலையில் அமைந்துள்ளது கருப்பராயன் கோவில். மிக பழமையான கோவில். இந்து சமய அறநிலையத்துறை மேற்பார்வையில், பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. பத்து பணியாளர்கள்

கோவை:வடவள்ளி கருப்பராயன் கோவிலில் பணிபுரியும், பத்து கோவில் பணியாளர்களுக்கு, கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால், கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.கோவை மருதமலைசெல்லும் சாலையில் அமைந்துள்ளது கருப்பராயன் கோவில். மிக பழமையான கோவில். இந்து சமய அறநிலையத்துறை மேற்பார்வையில், பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
பத்து பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.பரம்பரை அறங்காவலர்களில் மொத்தம் ஆறு பேர் உள்ளனர். அதில் இருவரின் பதவியிடம் குறித்த வழக்கு, கோர்ட்டில் நிலுவையிலுள்ளது.இந்நிலையில், கடந்த கடந்த ஜூலை மாதம், வடவள்ளியிலுள்ள பேங்க் ஆப் பரோடாவிலுள்ள கோவில் வங்கிக்கணக்கு செயல்பாட்டை நிறுத்தி வைக்க, கோவை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் பொறுப்பு செந்தில்வேலவன் பரிந்துரை செய்தார். அதனால் கடந்த நான்கு மாதங்களாக, கோவில் பணியாளர்களுக்கு மாதச்சம்பளம் வழங்கப்படவில்லை.
இது குறித்து, கோவில் பணியாளர்கள் கூறுகையில், 'பரம்பரை அறங்காவலர் பிரச்னை ஒருபுறம் நடக்கட்டும். அதற்கு தீர்வு மெல்ல தான் கிடைக்கும். அதற்கும் எங்களுக்கும் என்ன சம்மந்தம் உள்ளது? எங்களுக்கு மாதந்தோறும் வழங்க வேண்டிய சம்பளத்தை வழங்கினால் தான், எங்கள் வீட்டு அடுப்பு எரியும். இதை அதிகாரிகள் உணர்ந்து, உடனடியாக சம்பளம் வழங்க முன்வர வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X