பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்

Added : நவ 21, 2020
Share
Advertisement
விருத்தாசலம்: விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் நடந்த வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாமை, சப் கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் குழுக்களாக அதிகாரிகள் கண்காணித்தனர்.தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவின்பேரில், 2020 - 21ம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல், கடந்த 16ம் தேதி வெளியானது. அதன்படி, 18 வயது முடிந்தவர்களை வாக்காளர் பட்டியலில் இணைப்பது, இறந்தவர்கள் மற்றும் இடம் பெயர்ந்த

விருத்தாசலம்: விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் நடந்த வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாமை, சப் கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் குழுக்களாக அதிகாரிகள் கண்காணித்தனர்.தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவின்பேரில், 2020 - 21ம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல், கடந்த 16ம் தேதி வெளியானது. அதன்படி, 18 வயது முடிந்தவர்களை வாக்காளர் பட்டியலில் இணைப்பது, இறந்தவர்கள் மற்றும் இடம் பெயர்ந்த வாக்காளர்கள் பெயர்களை அகற்றுதல், பெயர் சேர்த்தல், நீக்கம் குறித்த பணிகளுக்கு நேற்று, இன்று மற்றும் டிசம்பர் 12, 13 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டது.விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் 282 ஓட்டுச்சாவடிகளில், சிறப்பு வாக்காளர் சேர்க்கை முகாம் நேற்று துவங்கியது. இதில், படிவம் 6, 7, 8 மற்றும் 8 ஏ ஆகியவற்றை பூர்த்தி செய்து வழங்கும் பணி நடந்தது.ஓட்டுச்சாவடிகளில் மேற்பார்வையாளர், ஓட்டுச் சாவடி நிலைய அலுவலர்களுடன், அ.தி.மு.க., - தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளும் உடனிருந்தனர்.விருத்தாசலம் நகராட்சியில் 66 ஓட்டுச்சாவடிகள் உட்பட சட்டசபை தொகுதியில் உள்ள 282 ஓட்டுச் சாவடிகளில் நடந்த சிறப்பு முகாமை, சப் கலெக்டர் பிரவீன்குமார், தாசில்தார் சிவக்குமார், தேர்தல் துணை தாசில்தார் அன்புராஜ் குழுக்களாக சென்று கண்காணித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X