சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கண்ணில் மிளகாய் பொடி துாவிய ஓட்டலுக்கு 'சீல்'!

Added : நவ 21, 2020
Share
Advertisement
கோவை:பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட உணவகத்துக்கு, மாநகராட்சி அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம், 37வது வார்டுக்குட்பட்ட, தண்ணீர் பந்தல் ரோட்டில் இயங்கி வரும், 12 அண்ட் மூன் என்ற உணவகத்தார், உணவு பொருட்களை ரோட்டின் ஓரத்தில் வைத்து சமைப்பதால், அதிலிருந்து வரும் கார துகள்கள் வாகனத்தில் செல்வோருக்கு, கண் எரிச்சல் போன்ற

கோவை:பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட உணவகத்துக்கு, மாநகராட்சி அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம், 37வது வார்டுக்குட்பட்ட, தண்ணீர் பந்தல் ரோட்டில் இயங்கி வரும், 12 அண்ட் மூன் என்ற உணவகத்தார், உணவு பொருட்களை ரோட்டின் ஓரத்தில் வைத்து சமைப்பதால், அதிலிருந்து வரும் கார துகள்கள் வாகனத்தில் செல்வோருக்கு, கண் எரிச்சல் போன்ற தொல்லைகள் ஏற்படுத்துவதாக, மாநகராட்சிக்கு புகார் சென்றது.
இப்புகாரின்பேரில், மாநகராட்சி சுகாதார துறையினர் அந்த உணவகத்தில் ஆய்வு செய்தனர். இதில், உணவு ஐட்டங்கள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதும், மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அவற்றை தயாரிப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த உணவகத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.இதேபோன்று சுகாதாரமற்ற மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் கடைகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி சுகாதார துறையினர் எச்சரித்துள்ளனர்.
தினமலர் செய்தி எதிரொலி!
நகரில் உள்ள குடியிருப்புகளின் மத்தியில், குடியிருப்போரின் அமைதியை குலைக்கும் செயல்பாடுகள் குறித்து, 'காலனியை காப்போம்' என, நமது நாளிதழில் 30 நாட்கள் தொடர் வெளியானது.இத்தொடர், குடியிருப்போர் சங்கங்கள், மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள விழிப்புணர்வு காரணமாக, அமைதியை குலைக்கும் இது போன்ற வணிக செயல்பாடுகளுக்கு எதிராக, பொதுமக்கள் குரல் கொடுக்க துவங்கியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X