பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் பஸ்கள் மீது நடவடிக்கை வட்டார போக்குவரத்து அலுவலர் தகவல்

Added : நவ 21, 2020
Share
Advertisement
கிள்ளை: அரசின் நோய் தடுப்பு விதிகளை கடைப்பிடிக்காத, 5 தனியார் பஸ்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் தெரிவித்தார்.கலெக்டரின் உத்தரவின் பேரில், புவனகிரி, கடலுார், சிதம்பரம் மற்றும் விருத்தாசலம் பகுதிகளில் சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் தலைமையில் ஆய்வாளர்கள் செல்வம், ரவிச்சந்திரன், கண்ணன், நல்லதம்பி,

கிள்ளை: அரசின் நோய் தடுப்பு விதிகளை கடைப்பிடிக்காத, 5 தனியார் பஸ்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் தெரிவித்தார்.கலெக்டரின் உத்தரவின் பேரில், புவனகிரி, கடலுார், சிதம்பரம் மற்றும் விருத்தாசலம் பகுதிகளில் சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் தலைமையில் ஆய்வாளர்கள் செல்வம், ரவிச்சந்திரன், கண்ணன், நல்லதம்பி, சோமசுந்தரம் தணிக்கை மேற்கொண்டனர்.இதில், கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை மீறி இயக்கிய , 5 தனியார் பஸ்கள் மீது தணிக்கை அறிக்கை வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் கூறியதாவது:வாகனங்கள் இயக்கும் போது, கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். பஸ்களை கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும். முக கவசம் அணிந்து வரும் பயணிகள் கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்த பிறகே பஸ்களில் ஏற்ற வேண்டும். சமூக இடைவெளியுடன் பயணிகளை அமர வைக்க வேண்டும். பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.அரசின் நோய் தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காத வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X