பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் பெயர் சேர்க்க வலியுறுத்தல்

Added : நவ 21, 2020
Share
Advertisement
கடலுார்: வாக்காளர் பட்டியலில் வரும் டிச., 15ம் தேதி வரையில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் செய்யலாம் என, கலெக்டர் சந்திரசேகர சகாமுரி கேட்டுக்கொண்டுள்ளார்.ஜனவரி-2021 ஐ தகுதி பெறும் நாளாக கொண்டு சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் செய்து வரைவு வாக்காளர் பட்டியல் 16.11.2020 அன்று வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் 20 லட்சத்து 82 ஆயிரத்து 840 வாக்காளர்கள் உள்ளனர்.தேர்தல் ஆணைய

கடலுார்: வாக்காளர் பட்டியலில் வரும் டிச., 15ம் தேதி வரையில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் செய்யலாம் என, கலெக்டர் சந்திரசேகர சகாமுரி கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜனவரி-2021 ஐ தகுதி பெறும் நாளாக கொண்டு சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் செய்து வரைவு வாக்காளர் பட்டியல் 16.11.2020 அன்று வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் 20 லட்சத்து 82 ஆயிரத்து 840 வாக்காளர்கள் உள்ளனர்.தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி 01.01.2021 அன்று 18 வயது பூர்த்தி செய்யும் அனைவரும் வாக்காளர்களாக பதியலாம். இதற்காக நேற்று (21ம் தேதி) மற்றும் 22 மற்றும் டிச., 12, 13 ஆகிய நான்கு நாட்களுக்கு அனைத்து ஓட்டுச் சாவடி மையங்களிலும் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கடலுார் மஞ்சக்குப்பம் ஜெயலட்சுமி கமிட்டி துவக்கப் பள்ளியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாமை, கலெக்டர் சந்திரசேகர சகாமுரி ஆய்வு செய்து, தனது பெயரை பட்டியலில் சேர்க்க, படிவம்-6 ஐ, ஓட்டுச்சாவடி நிலை அலுவலரிடம் வழங்கினார்.

கந்தசாமி நாயுடு கல்லுாரியில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாமை பார்வையிட்டார்.அவர் கூறுகையில், வாக்காளர் பட்டியல் திருத்தல், சேர்த்தல் பணிகளுக்கு வரும் டிச., 15 வரை கால அவகாசம் உள்ளது. வாக்காளர் பதிவு அலுவலகத்தில் மனு அளிக்கலாம்.www.nvsp.in என்ற இணையதளத்தின் மூலமும், இ-சேவை மையங்களின் மூலமும் விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு 04142-1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம், என்றார்.விழிப்புணர்வு பேரணி:18 வயது நிரம்பியவர்கள் பட்டியலில் பெயர் சேர்க்க வலியுறுத்தி, விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை டவுன் ஹால் அருகே கலெக்டர் துவக்கி வைத்து, செம்மண்டலம் வரை சைக்கிள் ஓட்டி சென்று திரும்பினார். அந்த வழியாக பஸ், ஆட்டோக்களில் சென்றவர்களிடம் துண்டு பிரசுரத்தை கலெக்டர் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X