பொது செய்தி

தமிழ்நாடு

தென்னை மரங்கள் காப்பீடு செய்யவிவசாயிகளுக்கு விழிப்புணர்வு

Added : நவ 21, 2020
Share
Advertisement
கடலுார்: தென்னை மரக் காப்பீட்டு திட்டத்திற்கான விழிப்புணர்வு முகாம் சேடப்பாளையம், காரைக்காடு மற்றும் சாத்தங்குப்பம் கிராமங்களில் நடந்தது.இயற்றை சீற்றங்களில் இருந்து தென்னை விவசாயிகளை பாதுகாக்க, தமிழக அரசு வேளாண் துறை, மத்திய பொதுத்துறை இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் சார்பில் தென்னை மரக் காப்பீட்டு திட்டம் செயல்படுகிறது. இந்த திட்டத்திற்கான விழிப்புணர்வு

கடலுார்: தென்னை மரக் காப்பீட்டு திட்டத்திற்கான விழிப்புணர்வு முகாம் சேடப்பாளையம், காரைக்காடு மற்றும் சாத்தங்குப்பம் கிராமங்களில் நடந்தது.இயற்றை சீற்றங்களில் இருந்து தென்னை விவசாயிகளை பாதுகாக்க, தமிழக அரசு வேளாண் துறை, மத்திய பொதுத்துறை இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் சார்பில் தென்னை மரக் காப்பீட்டு திட்டம் செயல்படுகிறது. இந்த திட்டத்திற்கான விழிப்புணர்வு முகாம் சேடப்பாளையம், காரைக்காடு மற்றும் சாத்தங்குப்பம் கிராமங்களில் நடந்தது.கடலுார் வேளாண் உதவி இயக்குநர் பூவராகன் தலைமையில் திட்ட விவரங்களை விவசாயிகளுக்கு விளக்கி, விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. வேளாண் அலுவலர் சுகன்யா, உதவி வேளாண் அலுவலர் விஜயகுமார் பங்கேற்றனர்.திட்டம் குறித்து பூவராகவன் கூறியதாவது:வெள்ளம், புயல், வறட்சி, பூச்சி நோய் தாக்குதல், எதிர்பாராத தீ விபத்து, நில அதிர்வு, ஆழிபேரலை, இயற்கை சீற்றங்களால் தென்னை மரங்கள் முழுவதும் பாதித்தாலும், முற்றிலும் பயன்தராத நிலை ஏற்பட்டாலோ இத்திட்டத்தில் இழப்பீடு வழங்கப்படும்.தனிப்பயிர், ஊடு பயிர், வரப்புப்பயிர், வீட்டுத் தோட்டத்திலோ குறைந்தபட்சம் பயனளிக்கும் 5 மரங்களாவது சாகுபடி செய்திருக்க வேண்டும். ஒரு எக்டேரில் 175 மரங்கள் மட்டுமே காப்பீடு செய்ய இயலும். குட்டை மற்றும் ஒட்டு ரகங்கள் 4ம் ஆண்டிலிருந்தும், நெட்டை ரகங்கள் 7ம் ஆண்டிலிருந்தும் 60 ஆண்டு வயது வரையிலும் காப்பீடு செய்யலாம்.சிட்டா, அடங்கல், தென்னந் தோப்பின் வரைபட விவரங்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பிரிமீயத் தொகைக்கான வங்கி வரைவோலையை இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தின் பெயரில் பெற்று அருகிலுள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களில் அளிக்க வேண்டும் என, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X