பொது செய்தி

தமிழ்நாடு

மணல் மூட்டை ரெடி பண்ணுங்க: மாநகராட்சி கமிஷனர் அறிவுரை

Added : நவ 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை;வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்வது மற்றும் மழையால் ஏற்படும் இடர்பாடுகளை சீரமைப்பது தொடர்பாக, கோவை மாநகராட்சி அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம், மத்திய மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது.அதில், மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் பேசியதாவது:காற்று, மழையால் மரங்கள், கிளைகள் ஒடிந்து விழுந்தால், அப்புறப்படுத்த மரம் அறுவை இயந்திரங்களை தயாராக

கோவை;வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்வது மற்றும் மழையால் ஏற்படும் இடர்பாடுகளை சீரமைப்பது தொடர்பாக, கோவை மாநகராட்சி அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம், மத்திய மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது.
அதில், மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் பேசியதாவது:காற்று, மழையால் மரங்கள், கிளைகள் ஒடிந்து விழுந்தால், அப்புறப்படுத்த மரம் அறுவை இயந்திரங்களை தயாராக வைத்திருங்கள். மழையால் தொற்று நோய் பரவாமல் தடுக்க, சுகாதாரத்துறை விழிப்புடன் செயல்பட வேண்டும். அவசியம் ஏற்பட்டால், மருத்துவ முகாம் நடத்தி, மக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.நீர்நிலைகளில் ஏற்படும் உடைப்பை அடைக்க, மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க, பள்ளிகளில் போதுமான வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.அவர்களுக்கு உணவு வழங்க, தேவையான பொருட்களை இருப்பில் வைத்திருங்கள். துார்வாராத இடங்களை கண்டறிந்து, கழிவுகளை அகற்ற வேண்டும். மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தாலோ, கம்பிகள் தாழ் வாகச் சென்றாலோ, அத்துறை அலுவலர்களை அழைத்து சரி செய்ய வேண்டும்.இவ்வாறு, கமிஷனர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், நகர பொறியாளர் லட்சுமணன், நகர் நல அலுவலர் ராஜா மற்றும் மண்டல உதவி கமிஷனர்கள், நிர்வாக பொறியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-நவ-202020:17:59 IST Report Abuse
Ram Pollachi மணல் மூட்டை வாங்க பணம் மூட்டை தேவை சீக்கிரம் சிறப்பு நிதியை ஒதுக்கவும். மிளிரும் நகரத்தின் கெளரவம் மணல் மூட்டையில் இருக்கு?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X