பொது செய்தி

தமிழ்நாடு

ஈமச்சடங்கு உதவி ரூ.5,000 ஆக உயர்வு

Added : நவ 21, 2020
Share
Advertisement
சென்னை:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஈமச்சடங்கிற்கு வழங்கப்படும் தொகையை, 2,500லிருந்து, 5,000 ரூபாயாக உயர்த்தி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்தவ மதம் மாறிய ஆதி திராவிட இனத்தவர்களில், எவரேனும் இறந்தால், அவர்கள் ஈமச்சடங்கிற்கு வழங்கப்படும் உதவித்தொகை, ௨௦௧௦ல், 500 ரூபாயில் இருந்து, 2,500 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதை பெறுவதற்கான,

சென்னை:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஈமச்சடங்கிற்கு வழங்கப்படும் தொகையை, 2,500லிருந்து, 5,000 ரூபாயாக உயர்த்தி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்தவ மதம் மாறிய ஆதி திராவிட இனத்தவர்களில், எவரேனும் இறந்தால், அவர்கள் ஈமச்சடங்கிற்கு வழங்கப்படும் உதவித்தொகை, ௨௦௧௦ல், 500 ரூபாயில் இருந்து, 2,500 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதை பெறுவதற்கான, இறந்தவரின் குடும்ப வருமான வரம்பு, கிராமப்புறங்களில், 40 ஆயிரம் ரூபாய்; நகர்ப்புறங்களில், 60 ஆயிரம் ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டது.

தற்போது, ஆதிதிராவிடர் நல இயக்குனர் கருத்துரு அடிப்படையில், ஈமச்சடங்கிற்கு வழங்கப் படும், 2,500ஐ, 5,000 ரூபாயாக உயர்த்தியும், இதனால், ஏற்படும் கூடுதல் செலவான, 4.97 கோடி ரூபாய்க்கு நிதி ஒப்பளித்தும், அரசு உத்தரவிட்டுள்ளது.இந்நிதியுதவியை பெறுவதற்கான வருமான வரம்பு, கிராமப்புறங்களில், 40 ஆயிரம் ரூபாயாகவும், நகர்ப்புறங்களில், 72 ஆயிரம் ரூபாயாகவும், நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை, ஆதிதிராவிடர் நலத்துறை செயலர் ஒட்டெம்டாய் பிறப்பித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X