பொது செய்தி

தமிழ்நாடு

ஒழுகுது பழைய குடிநீர் தொட்டி: பல ஆண்டுகளாச்சு சுத்தம் செஞ்சு

Added : நவ 21, 2020
Share
Advertisement
மதுக்கரை:மதுக்கரை பாரதி காலனியில், ஒழுகும் மேல்நிலை குடிநீர் தொட்டியால் குடிநீர் வீணாகிறது.மதுக்கரை பேரூராட்சிக்குட்பட்ட, 10வது வார்டு பாரதி நகரில், 30 ஆண்டுகளுக்கு முன், 2.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. இதிலிருந்து, 10, 11 மற்றும் 12வது வார்டின் ஒரு பகுதிக்கு, எட்டு நாட்களுக்கு ஒருமுறை அத்திக்கடவு குடிநீர் விநியோகம்
 ஒழுகுது பழைய குடிநீர் தொட்டி: பல ஆண்டுகளாச்சு சுத்தம் செஞ்சு

மதுக்கரை:மதுக்கரை பாரதி காலனியில், ஒழுகும் மேல்நிலை குடிநீர் தொட்டியால் குடிநீர் வீணாகிறது.மதுக்கரை பேரூராட்சிக்குட்பட்ட, 10வது வார்டு பாரதி நகரில், 30 ஆண்டுகளுக்கு முன், 2.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. இதிலிருந்து, 10, 11 மற்றும் 12வது வார்டின் ஒரு பகுதிக்கு, எட்டு நாட்களுக்கு ஒருமுறை அத்திக்கடவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
தொட்டிக்கு வரும் குடிநீரின் அழுத்தம் குறைவாக இருப்பதால், ஐந்தாண்டுக்கு முன் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள சம்ப் (நீர் உந்து நிலையம்) கட்டப்பட்டு, தண்ணீர் ஏற்றப்படுகிறது.இந்நிலையில், மேல்நிலை தொட்டியின் சுற்று சுவரில் விரிசல் ஏற்பட்டு, தண்ணீர் ஒழுகுகிறது. மேல்தள கான்கிரீட் இடிந்து விழுகிறது. படிக்கட்டு மற்றும் பில்லர்களும் சேதமடைந்துள்ளன. இதனால் கடந்த ஆறு மாதங்களாக, தொட்டி சுத்தம் செய்யப்படவில்லை. குடிநீரால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. விரைவில் தொட்டியை சீரமைக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, மக்களின் எதிர்பார்ப்பாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X