பொது செய்தி

தமிழ்நாடு

உழைப்பை ஆயுதமாக்கினார் மேரி

Added : நவ 21, 2020
Share
Advertisement
வானமே இடிந்து தலை மீது விழுந்தாலும், எழுந்து நிற்பாள் பெண். அவ்வளவு நெஞ்சுரமும் தன்னம்பிக்கையும் ஒருங்கே அமையப்பெற்ற, மாபெரும் சக்தி அவள்.அதை நிரூபிக்கிறார், கோவை பாப்பம்பட்டியை சேர்ந்த 58 வயதான மேரி. 16 ஆண்டுகளுக்கு முன்பு, சாதாரண இல்லத்தரசியாக மட்டுமே இருந்த இவர், 11 பேருடன் ரோஜா என்ற மகளிர் குழுவில் இணைந்துள்ளார். இக் குழுவினர், மானியத்துடன் அரசு கடன் உதவி வழங்குவதை
 உழைப்பை ஆயுதமாக்கினார் மேரி

வானமே இடிந்து தலை மீது விழுந்தாலும், எழுந்து நிற்பாள் பெண். அவ்வளவு நெஞ்சுரமும் தன்னம்பிக்கையும் ஒருங்கே அமையப்பெற்ற, மாபெரும் சக்தி அவள்.அதை நிரூபிக்கிறார், கோவை பாப்பம்பட்டியை சேர்ந்த 58 வயதான மேரி. 16 ஆண்டுகளுக்கு முன்பு, சாதாரண இல்லத்தரசியாக மட்டுமே இருந்த இவர், 11 பேருடன் ரோஜா என்ற மகளிர் குழுவில் இணைந்துள்ளார். இக் குழுவினர், மானியத்துடன் அரசு கடன் உதவி வழங்குவதை அறிந்து, சணல் பை தயாரிப்பில் இறங்கியுள்ளனர்.சணல் மூலம் புத்தக பை, லேப்டாப் பை, தாம்பூல பை, ஹேண்ட் பேக், மொபைல் போன் பவுச் என விதம் விதமாக தைத்து சந்தைப்படுத்திய இவர்கள், தற்போது நல்ல ஓர் நிலையை எட்டியுள்ளனர்.இது குறித்து மேரி, ''வீட்டுக்காரருக்கு நடந்த திடீர் ஆக்சிடென்டால, அவரால பெரிய வேலைகளுக்கெல்லாம் போக முடியாம போச்சு. மூணு பெண் குழந்தைங்களையும் வளர்த்து, ஆளாக்க வேண்டிய முழு பொறுப்பும் என் மேல் வந்து விழுந்துச்சு,'' ''அப்பதான் ரோஜா குழுவுல சேர்ந்து, சணல் பை தயாரிக்க கத்துக்கிட்டேன். என்கூட சேர்ந்த 11 லேடீசும் என்னைய மாதிரியே கஷ்டப்படுறவங்கதான். அதனால வாழ்க்கைல எப்படியும் ஜெயிச்சு மேல வரணும்னுங்கற வெறி, எங்க ஒவ்வொருத்தர்கிட்டயும் இருந்துச்சு,''''அலைஞ்சு, திரிஞ்சு ஆர்டர் வாங்குறது, அதை தரமா தயாரிக்கறதுன்னு பேயா வேலை பார்த்தோம். எங்க உழைப்பு வீண் போகலை. தரமா இருந்ததால எங்க பொருட்களை, இப்ப எல்லாரும் கேட்டு வாங்குறாங்க,'' என்கிறார் பெருமிதத்துடன்.''அதெல்லாம் இருக்கட்டும்...பொண்ணுங்களை எதுவரைக்கும் படிக்க வச்சீங்க,'' என்று கேட்டோம்.''எனக்கு மூணு பொண்ணுங்க. ரெண்டு பேரை உயர்கல்வி படிக்க வச்சு கல்யாணம் பண்ணி வச்சுட்டேன். கடைக்குட்டி படிக்கிறா,'' என்றார்.''கொரோனாவால உங்க தொழில் பாதிக்கலையா,'' என்றோம்.''அப்புறம் பாதிக்காம இருக்குமா...உடனே நேரத்துக்கு ஏத்த மாதிரி மாஸ்க் தயாரிக்கற வேலையில இறங்கிட்டோம். இப்ப, கலெக்டர் ஆபீசுகாரங்க எங்களுக்கும், அங்கயே ஒரு இடம் தந்து எங்க தொழிலை 'என்கரேஜ்' செய்றாங்க. ஓரளவுக்கு பரவாயில்லை,''''உங்களை மாதிரி முன்னேற விரும்பற பொண்ணுங்களுக்கு, என்ன சொல்ல விரும்பறீங்க,'' என்று கேட்டதற்கு, ''பொண்ணுங்க கட்டாயம் ஒரு தொழிலை கத்து வச்சுக்கிறணும். சூழல் எதுவா இருந்தாலும், தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் விட்டுறாம, அந்த தொழிலை வளர்க்கணும்,'' என்று 'டிப்ஸ்' அளித்தார்.''ஆனால் கையில் சிறிதாவது பணம் வேண்டுமே...,''''முதலீடு இல்லாம துவங்க, பல தொழில் வாய்ப்புகள் இருக்கு. கவர்மென்டும் கடன் குடுத்து ெஹல்ப் பண்ணுது. அதை சரியா பயன்படுத்த நாம தயாரா இருந்தா நிச்சயம் ஜெயிச்சுறலாம்,'' என்று கூறி, நம்பிக்கையுடன் கட்டை விரலை உயர்த்தி, விடை கொடுத்தார் மேரி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X