பொது செய்தி

தமிழ்நாடு

23 மாவட்டங்களில் மழை குறைவு அமைச்சர் உதயகுமார் தகவல்

Added : நவ 21, 2020
Share
Advertisement
சென்னை:''தமிழகத்தில் இதுவரை, 23 மாவட்டங்களில், இயல்பை விட குறைவான அளவே மழை பெய்துள்ளது,'' என, வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:தமிழகத்தின் இயல்பான மழை அளவில், 47.32 சதவீதம், வடகிழக்கு பருவமழை காலத்தில் கிடைக்கிறது. இந்த ஆண்டு, வடகிழக்கு பருவ மழை, அக்., 28ல் துவங்கியது. ௨2 சதவீதம் குறைவுஅன்று முதல் நேற்று முன்தினம் வரை, இயல்பான மழை அளவான, 30.8 செ.மீ.,

சென்னை:''தமிழகத்தில் இதுவரை, 23 மாவட்டங்களில், இயல்பை விட குறைவான அளவே மழை பெய்துள்ளது,'' என, வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:தமிழகத்தின் இயல்பான மழை அளவில், 47.32 சதவீதம், வடகிழக்கு பருவமழை காலத்தில் கிடைக்கிறது. இந்த ஆண்டு, வடகிழக்கு பருவ மழை, அக்., 28ல் துவங்கியது. ௨2 சதவீதம் குறைவுஅன்று முதல் நேற்று முன்தினம் வரை, இயல்பான மழை அளவான, 30.8 செ.மீ., பெய்திருக்க வேண்டும்; 24.1 செ.மீ., மட்டுமே பெய்து உள்ளது. இது, இயல்பைவிட, ௨2 சதவீதம் குறைவு.

விருதுநகர் மாவட்டத்தில், இயல்பை விட அதிகமாகவும், சென்னை, கோவை, காஞ்சிபுரம், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, திருநெல்வேலி, தென்காசி, திருப்பூர், திருவண்ணாமலை, துாத்துக்குடி, திருப்பத்துார் மாவட்டங்களில், இயல்பான அளவிற்கும் மழை பெய்துள்ளது. மீதமுள்ள, 23 மாவட்டங்களில், இயல்பை விட, குறைவான அளவு மழை பதிவாகி உள்ளது.சென்னைக்கு குடிநீர் வழங்கும், செம்பரம்பாக்கம் ஏரியில், 21.25 அடி நீர் இருப்பு உள்ளது.

இந்த ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மூன்று நாட்களாக, அதிக அளவு மழைப்பொழிவு இல்லை. இந்த ஏரிக்கு, உபரி நீர் வழங்கக்கூடிய, மணிமங்கலம் ஏரியில், 80 சதவீதம்; பிள்ளைப்பாக்கம் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் ஏரிகளில், 89 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. எனவே, செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து, உபரி நீர் வெளியேற்றப்படலாம் என, பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை.


அறிவுறுத்தல்



தமிழகத்தில் உள்ள, 14 ஆயிரத்து, 144 பாசன ஏரிகளில், 1,069 ஏரிகள், ௧௦௦ சதவீத கொள்ளளவை எட்டியுள்ளன. அதிக மழை பெய்து உள்ள, 21 மாவட்டங்களில், 9,529 பாசன ஏரிகளில், 969 ஏரிகள், ௧௦௦ சதவீதம்; கடலோர மாவட்டங்களில் உள்ள, 7,378 ஏரிகளில், 748 ஏரிகள், ௧௦௦ சதவீதம் கொள்ளளவை எட்டியுள்ளன.தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில், நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்.

இது, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, அடுத்த, 48 மணி நேரத்தில், வடமேற்கு மற்றும் மேற்கு திசையில், தமிழக கடற்கரையை நோக்கி நகரக் கூடும்.இதனால், நாளை மற்றும் நாளை மறுதினம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில், கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இப்பகுதிகளில், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்த, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, உதயகுமார் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X