பொது செய்தி

தமிழ்நாடு

2 வருஷ பங்கு தொகை என்னாச்சு: தூய்மை பணியாளர்கள் எதிர்பார்ப்பு

Added : நவ 21, 2020
Share
Advertisement
கோவை;கோவை மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்க உறுப்பினர்களான, துாய்மை பணியாளர்களுக்கு, இரு ஆண்டுகளுக்கான பங்கு தொகை வழங்காததால், சர்ச்சை உருவாகியுள்ளது.கோவை மாநகராட்சியில் பணியாற்றும் துாய்மை பணியாளர்கள் நலனுக்காக, சுகாதார பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கம் நடத்தப்படுகிறது; 1,300 துாய்மை பணியாளர்கள் உறுப்பினர்களாக

கோவை;கோவை மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்க உறுப்பினர்களான, துாய்மை பணியாளர்களுக்கு, இரு ஆண்டுகளுக்கான பங்கு தொகை வழங்காததால், சர்ச்சை உருவாகியுள்ளது.கோவை மாநகராட்சியில் பணியாற்றும் துாய்மை பணியாளர்கள் நலனுக்காக, சுகாதார பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கம் நடத்தப்படுகிறது; 1,300 துாய்மை பணியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். மாதந்தோறும், இவர்களது சம்பளத்தில், சந்தாவாக ரூ.500 பிடித்தம் செய்யப்படுகிறது.இவ்வாறு பிடித்தம் செய்யும் தொகையில் இருந்து, உறுப்பினர்களுக்கு கடன் தொகை வழங்கப்படும். சமீபகாலமாக, அவ்வாறு செய்யாமல், மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து, உறுப்பினர்கள் பெயரில் கடன் பெற்று வழங்கப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி சமயத்தில், உறுப்பினர்களுக்கு லாபத்தில் பங்கு தொகை வழங்கப்படும். கடந்த இரு ஆண்டுகளுக்கு, அத்தொகை வழங்கப்படவில்லை. இது, துாய்மை பணியாளர்களிடம் புகைச்சலை உருவாக்கியுள்ளது.கடன் வாங்கினால், லட்சத்துக்கு, 10 ஆயிரம் ரூபாய், செயல்பாட்டுக்கு கட்டணம் என, ரூ.7,000 வசூலிப்பதாக, தொழிலாளர்கள் மத்தியில் குற்றம் சாட்டப்படுகிறது.இதுதொடர்பாக, சங்க செயலாளர் சத்யராஜிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:உறுப்பினர்களுக்கு இரு ஆண்டுகளுக்கான பங்கு தொகை நிலுவை இருக்கிறது. தீபாவளி சமயத்தில் கொடுத்திருக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் எவ்வளவு ரூபாய் என கணக்கிட்டு, தயாராக வைத்திருக்கிறோம். 'கொரோனா' காலமாக இருப்பதால், கூட்டம் சேர்க்கக் கூடாது என்பதால், கொடுக்கவில்லை. தைப்பொங்கலுக்கு முன், கொடுக்க உள்ளோம்.உறுப்பினர்களுக்கு கடன் வழங்கியதற்கு, மத்திய கூட்டுறவு வங்கிக்கு தவணை செலுத்தி வருவதால், கூட்டுறவு சங்கத்தில், தற்போது போதிய நிதியில்லை. அதனால், ஓராண்டுக்கான பங்கு தொகை மட்டும் வழங்க இருக்கிறோம்.உறுப்பினர்கள், 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கினால், 50 ஆயிரம் ரூபாய் 'டிபாசிட்'டாக பிடித்தம் செய்து விட்டு, கொடுக்கிறோம். அத்தொகை, கடைசியாக வழங்கப்படும். இதை தவறாக புரிந்து கொள்கிறார்கள்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X