பொது செய்தி

தமிழ்நாடு

போட்டித்தேர்வில் வெற்றி பெற

Added : நவ 21, 2020
Share
Advertisement
போட்டித்தேர்வுகள் மீண்டும் எப்போது நடக்கும் என, ஏதாவது ஐடியா உள்ளதா?மத்திய அரசு தேர்வாணையம் தேர்வுகளை துவக்கி விட்டது. மாநில அரசு குரூப் 1 தேர்வு ஜன., மாதம் நடக்கும் என அறிவித்துள்ளது. ஜன., முதல் வழக்கம் போல் தேர்வுகள் நடக்கும் என்பதால், மாணவர்கள் பயிற்சிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். தொடர் பயிற்சியே வெற்றிக்கு வழிவகுக்கும்.மத்திய அரசு பணி தேர்வாணையம் மூலம்
  போட்டித்தேர்வில் வெற்றி பெற

போட்டித்தேர்வுகள் மீண்டும் எப்போது நடக்கும் என, ஏதாவது ஐடியா உள்ளதா?

மத்திய அரசு தேர்வாணையம் தேர்வுகளை துவக்கி விட்டது. மாநில அரசு குரூப் 1 தேர்வு ஜன., மாதம் நடக்கும் என அறிவித்துள்ளது. ஜன., முதல் வழக்கம் போல் தேர்வுகள் நடக்கும் என்பதால், மாணவர்கள் பயிற்சிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். தொடர் பயிற்சியே வெற்றிக்கு வழிவகுக்கும்.மத்திய அரசு பணி தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில், தமிழக மாணவர்களின் பங்களிப்பு மிகவும் குறைவாக உள்ளதே?

சிவில் சர்வீசஸ் தேர்வுகளை பொறுத்தவரையில், முதல் மூன்று மாநிலங்களில் தமிழகம் இடம் பெற்றுள்ளது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட தேர்வு சார்ந்து, பலரிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் பிற தேர்வுகளிலும், இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும்.அரசு பணிகளை இலக்காக எடுக்கும் மாணவர்கள், எந்த வயதில் இருந்து பயிற்சியை துவக்க வேண்டும்?

கல்லுாரி முதலாமாண்டு முதல், போட்டித்தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். கல்லுாரி படிப்புக்கு 90 சதவீதமும், போட்டித்தேர்வுக்கு 10 சதவீதமும் என்ற அளவில், நேரத்தை ஒதுக்கி பயிற்சி மேற்கொள்ள வேண்டும். முதலில், பள்ளி பாடபுத்தகங்களை தரமாக படிக்க வேண்டும்.அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் அடித்தளம், பள்ளி பாடபுத்தகங்களே. பாடங்களை மனப்பாடம் மட்டும் செய்யாமல், புரிந்து படித்து மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். நினைவுத்திறனை மேம்படுத்திக்கொள்வதும் அவசியம்.புத்தக வாசிப்பு இளைஞர்களிடம் குறைந்துவிட்டதே? நாளிதழ் வாசிப்பு போட்டித்தேர்வுகளுக்கு எந்த வகையில் பயன்படும்?

புத்தகம், நாளிதழ் வாசிப்பு, ஒருவரை நல்வழிப்படுத்தும். தலைமைப்பண்பு, தொடர்பு திறன் போன்றவை மேம்படுத்த வாசிப்பு முக்கியம். பள்ளி முதலே புத்தக வாசிப்பு பழக்கத்தை கொண்டுவர வேண்டியது அவசியம். தவிர, போட்டித்தேர்வுகளுக்கு நாளிதழ் வாசிப்பு, செய்தி தொலைகாட்சி பார்ப்பது என்பது மிகவும் அவசியம். அனைத்து தேர்வுகளிலும் நடப்பு நிகழ்வுகள் சார்ந்த கேள்விகள், அதிகளவில் இடம் பெறும்.சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படித்தால்தான், மத்திய அரசு பணிக்கு செல்ல முடியும் என்ற கருத்து உள்ளதே?

சி.பி.எஸ்.இ., பாடபுத்தகங்களில் இருந்து அதிக கேள்விகள் வருவது உண்மை; ஆனால், அவர்கள் மட்டும் தான் தேர்ச்சி பெற முடியும் என்பது தவறான புரிதல். தற்போது மாநில அரசின் பாடத்திட்டம் தரமானதாக உள்ளது; இதை படித்தும், தைரியமாக மத்திய அரசின் போட்டி தேர்வுகளுக்கு தயாராகலாம்.சிவில் சர்வீசஸ் தேர்வை, தமிழில் எழுதலாம் என்றாலும், அடிப்படை ஆங்கில அறிவு அவசியம். முயற்சி செய்தால், ஆறு மாதத்தில் எளிதாக கற்றுக்கொள்ளலாம். தயக்கத்தை விட்டால் போதும்.இலவச பயிற்சி என்பதை இலக்காக கொண்டு செயல்பட நோக்கம்?

சிவில் சர்வீசஸ் தேர்வில், இறுதி கட்டத்தில் வாய்ப்பு நழுவி போனது. சரி, பிற மாணவர்களுக்காவது அந்த வாய்ப்பு கிடைக்கட்டும் என்ற எண்ணத்தில், இலவச பயிற்சி மையத்தை துவங்கி, வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். மாணவர்கள் தங்கி பயிற்சி எடுக்கும் அளவில், ஓர் இலவச பயிற்சி மையத்தை உருவாக்க வேண்டும் என்பதே என் கனவு. அதை நோக்கியே பயணிக்கின்றேன். இதற்கு, நண்பர்கள் செந்தில்குமார், ராஜேந்திரன், சந்திரன் உள்ளிட்டோர் உதவுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X