பொது செய்தி

தமிழ்நாடு

மாசு இல்லாத நகரமாக்க இணைந்தன 'இதயங்கள்!'

Added : நவ 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை:சிறுதுளி, இதயங்கள் அறக்கட்டளை, பெர்ன்ஸ் ஆர்கானிக் சொசைட்டி மற்றும் கிரீன்பீல்டு ஹவுசிங் இந்தியா நிறுவனம் சார்பில், மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது.காளப்பட்டி கிரீன்பீல்டு குடியிருப்பு வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், 312 மரக்கன்றுகள் நடப்பட்டன.இதயங்கள் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன் கூறுகையில், ''கோவையை மாசு இல்லாத நகரமாக மாற்ற,
 மாசு இல்லாத நகரமாக்க இணைந்தன 'இதயங்கள்!'

கோவை:சிறுதுளி, இதயங்கள் அறக்கட்டளை, பெர்ன்ஸ் ஆர்கானிக் சொசைட்டி மற்றும் கிரீன்பீல்டு ஹவுசிங் இந்தியா நிறுவனம் சார்பில், மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது.காளப்பட்டி கிரீன்பீல்டு குடியிருப்பு வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், 312 மரக்கன்றுகள் நடப்பட்டன.இதயங்கள் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன் கூறுகையில், ''கோவையை மாசு இல்லாத நகரமாக மாற்ற, இதயங்கள் அறக்கட்டளையின் குழந்தைகள், இம்மரக்கன்றுகளை நட்டனர்,''என்றார்.'சிறுதுளி' நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் தலைமை வகித்து பேசுகையில், ''மரங்களை அனைவரும் பாதுகாக்க வேண்டும். மரங்களுக்கு மட்டுமே ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் தன்மை உள்ளது. இயற்கையை மீட்டெடுக்க அனைவரும் முயற்சிக்க வேண்டும்,'' என்றார்.முன்னதாக, நிகழ்ச்சியில் ரெப்கோ வீட்டுக்கடன் நிறுவனம் சார்பில், இதயங்கள் அறக்கட்டளைக்கு, ரூ.12.50 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. கிரீன்பீல்டு ஹவுசிங் இந்தியா நிறுவனத்தின் பாலசுப்ரமணியம், பெர்ன்ஸ் ஆர்கானிக் சொசைட்டியின் நிர்வாக அறங்காவலர் அறிவழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-நவ-202020:08:56 IST Report Abuse
Ram Pollachi காடு, தோட்டம், மரத்தை மற்றும் குளம் குட்டைகளை அழித்து மனைப்பிரிவுகளாக்கும் கட்டிட பொறியாளர்கள் மற்றும் நிதிஉதவி அளிக்கும் வங்கிகள் இணைந்து இயற்கையை மீட்பது கேளிக்கூத்து. மரத்தின் நண்பன் மனிதன் ! மனிதனின் எதிரி மரம்!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X