சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புரோநோட்டு தர மறுப்பு கடன் கொடுத்தவர் மீது புகார்

Added : நவ 21, 2020
Share
Advertisement
கள்ளக்குறிச்சி: வட்டிக்கு கடன் வாங்கிய இடத்தில் பணம் கட்டியும் புரோநோட்டை தர மறுத்து வருவதாக கடன் கொடுத்தவர் மீது மூதாட்டி கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் மனு கொடுத்தார்.உளுந்துார்பேட்டை அடுத்த பாதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் எல்லம்மாள், 77; இவர் தனது மகள் அன்னபூரணி மற்றும் பேரக்குழந்தைகளுடன் வந்து எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த மனு:எனது மகன்கள் வீரமணி, மாரிமுத்து

கள்ளக்குறிச்சி: வட்டிக்கு கடன் வாங்கிய இடத்தில் பணம் கட்டியும் புரோநோட்டை தர மறுத்து வருவதாக கடன் கொடுத்தவர் மீது மூதாட்டி கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

உளுந்துார்பேட்டை அடுத்த பாதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் எல்லம்மாள், 77; இவர் தனது மகள் அன்னபூரணி மற்றும் பேரக்குழந்தைகளுடன் வந்து எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த மனு:எனது மகன்கள் வீரமணி, மாரிமுத்து ஆகியோர் வெளிநாடு செல்வதற்காக வைத்தி என்பவரிடம் கடந்த 2017ம் ஆண்டு 70 ஆயிரம் ரூபாய் வட்டிக்கு வாங்கினேன்.அதற்கு மாறாக வெற்று புரோநோட்டில் எனது மகனும், மகளும் கையொப்பமிட்டுக் கொடுத்தனர். கடனாக பெற்ற 70 ஆயிரம் ரூபாய்க்கு, பல்வேறு தவணைகளில் 1 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டேன்.ஆனால் வட்டி மேல் வட்டி வசூலித்து எங்களது புரோநோட்டை தரமறுக்கிறார். எனவே, இந்த பிரச்னையில் இருந்து எங்களை மீட்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X