பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் இடம் அளித்தால் நெல் கொள்முதல் நிலையங்கள்

Added : நவ 21, 2020
Share
Advertisement
சென்னை:விவசாயிகள் தானமாக நிலம் வழங்கினால், அந்த இடங்களில், நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கும் பணியை துரிதகதியில் மேற்கொள்ள, தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் முடிவு செய்துள்ளது.தமிழக விவசாயிகளிடம் இருந்து, மத்திய அரசின் இந்திய உணவு கழகம் சார்பில், நுகர்பொருள் வாணிப கழகம், நெல் கொள்முதல் செய்கிறது. நேரடி கொள்முதல்அந்த நெல், அரிசியாக மாற்றப்பட்டு, ரேஷன்

சென்னை:விவசாயிகள் தானமாக நிலம் வழங்கினால், அந்த இடங்களில், நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கும் பணியை துரிதகதியில் மேற்கொள்ள, தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் முடிவு செய்துள்ளது.

தமிழக விவசாயிகளிடம் இருந்து, மத்திய அரசின் இந்திய உணவு கழகம் சார்பில், நுகர்பொருள் வாணிப கழகம், நெல் கொள்முதல் செய்கிறது. நேரடி கொள்முதல்அந்த நெல், அரிசியாக மாற்றப்பட்டு, ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது.அக்டோபர் முதல் செப்., வரை நெல் கொள்முதல் சீசன். நெல் கொள்முதல் செய்வதற்காக, நெல் வரத்து அதிகம் உள்ள இடங்களில், நேரடி கொள்முதல் மையங்கள் செயல்படுகின்றன. தற்போது, வாணிப கழகத்திற்கு, 600க்கும் குறைவான நிரந்தர நிலையங்கள் உள்ளன. சீசன் காலத்தில், அதிக நெல் வருவதால், மாவட்ட கலெக்டர்கள் அனுமதியுடன், 1,500க்கும் மேற்பட்ட தற்காலிக நிலையங்கள் துவக்கப்படுகின்றன.

இதுகுறித்து, வாணிப கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஒரு நிரந்தர கொள்முதல் நிலையம் அமைக்க, 40 சென்ட் அதாவது, 17 ஆயிரத்து, 440 சதுர அடி தேவை. அங்கு, 100 டன் கொள்ளவில் உடைய நெல்லை கையாள முடியும். நிரந்தர கொள்முதல் நிலையத்தின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.சிரமம்ஆனால், அதற்கு இடம் கிடைப்பதில் சிரமம் உள்ளது. எனவே, நெல்வரத்து உள்ள பகுதிகளில், விவசாயிகள், தானமாக நிலம் வழங்கினால், அந்த இடங்களில், துரிதகதியில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும்.

இதுதொடர்பாக, கலெக்டர்கள் தலைமையில் நடக்கும் விவசாயிகளின் குறைதீர் கூட்டத்திலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. வருவாய் துறையிடமும், நிலம் கேட்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X