பொது செய்தி

தமிழ்நாடு

வரி செலுத்தாத வீடுகளுக்கு நோட்டீஸ்

Added : நவ 21, 2020
Share
Advertisement
கோவை:கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் வரி செலுத்தாமல் இருந்தவர்களில், 314 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, 25 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.கோவை மாநகராட்சிக்கு சொத்து வரி, குடிநீர் கட்டணமே பிரதான வருவாய். குடிநீர் கட்டணமாக பெறப்படும் தொகை, பராமரிப்புக்கே செலவாகி விடும். வரியினங்கள் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டே, ஊழியர்களுக்கு சம்பளம்

கோவை:கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் வரி செலுத்தாமல் இருந்தவர்களில், 314 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, 25 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.கோவை மாநகராட்சிக்கு சொத்து வரி, குடிநீர் கட்டணமே பிரதான வருவாய். குடிநீர் கட்டணமாக பெறப்படும் தொகை, பராமரிப்புக்கே செலவாகி விடும். வரியினங்கள் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டே, ஊழியர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நடப்பு நிதியாண்டு (2020-2021) முடிய, இன்னும் நான்கு மாதங்களே இருப்பதால், வரியினங்களை வசூலிக்க, ஒவ்வொரு மண்டலத்துக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட, 94 முதல், 100வது வார்டுக்குள், உதவி கமிஷனர் ரவி, உதவி நிர்வாக பொறியாளர் சுந்தர்ராஜ் மேற்பார்வையில், உதவி பொறியாளர் சபரி ராஜூ தலைமையிலான குழுவினர், வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவன பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.314 பேருக்கு நோட்டீஸ் வழங்கியதில், 24 லட்சத்து, 85 ஆயிரத்து, 839 ரூபாய் வசூலிக்கப்பட்டது. சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தாததால், 22 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதேபோல், மற்ற மண்டல அலுவலகங்களில் இருந்தும் நோட்டீஸ் வழங்கப்படுகிறது. எனவே, மாநகராட்சிக்கு வரியினங்களை நிலுவையின்றி உடனடியாக செலுத்த வேண்டுமென, அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X