பொது செய்தி

தமிழ்நாடு

திருக்கோவிலுார் வட்டார வள மையத்தில் பயிற்சி

Added : நவ 21, 2020
Share
Advertisement
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் வட்டார வளமையத்தில் 'கற்போம்; எழுதுவோம்' இயக்கத்திற்கு தேர்வு செய்யப்பட்ட தன்னார்வலர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.எழுத்தறிவின்மையை அகற்றும் வகையில் அரசு 'கற்போம்; எழுதுவோம்' என்ற திட்டத்தை துவக்கியுள்ளது. திருக்கோவிலுார் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் எழுதப்படிக்கத் தெரியாதவர்களின் தகவல்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் வட்டார வளமையத்தில் 'கற்போம்; எழுதுவோம்' இயக்கத்திற்கு தேர்வு செய்யப்பட்ட தன்னார்வலர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.எழுத்தறிவின்மையை அகற்றும் வகையில் அரசு 'கற்போம்; எழுதுவோம்' என்ற திட்டத்தை துவக்கியுள்ளது. திருக்கோவிலுார் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் எழுதப்படிக்கத் தெரியாதவர்களின் தகவல் சேகரிக்கப்பட்டு, அவர்களுக்கு படிப்பறிவு ஏற்படுத்தும் வகையில், தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இவர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி திருக்கோவிலுார் வட்டார வள மையத்தில் நடந்தது.மாவட்ட கல்வி அலுவலர் கலைச்செல்வன் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். பள்ளி துணை ஆய்வாளர் பிரபாகரன் வரவேற்றார்.வட்டார வளமைய மேற்பார்வையாளர் சந்தியாகு சிங்கராயன் முன்னிலை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் முரளிகிருஷ்ணன் ஆலோசனை வழங்கினார். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் கலைமதி, 60 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X