பொது செய்தி

தமிழ்நாடு

நிலச்சரிவில் குடும்பத்தை இழந்த தம்பதியருக்கு நிதியுதவி

Added : நவ 21, 2020
Share
Advertisement
கோவை:கேரள மாநிலம் மூணாரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஏற்பட்ட நிலச்சரிவில், குடும்பத்தை இழந்த தம்பதி ரமேஷ், கயல்விழிக்கு நிதியுதவி அளித்து, கலெக்டர் ராஜாமணி உதவினார்.நிலச்சரிவில், வீடு, குடும்ப உறுப்பினர்களை பறிகொடுத்து, பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட ரமேஷ், நிறைமாத கர்ப்பிணி மனைவியுடன் திருப்பூர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். பிரசவத்திற்காக,

கோவை:கேரள மாநிலம் மூணாரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஏற்பட்ட நிலச்சரிவில், குடும்பத்தை இழந்த தம்பதி ரமேஷ், கயல்விழிக்கு நிதியுதவி அளித்து, கலெக்டர் ராஜாமணி உதவினார்.நிலச்சரிவில், வீடு, குடும்ப உறுப்பினர்களை பறிகொடுத்து, பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட ரமேஷ், நிறைமாத கர்ப்பிணி மனைவியுடன் திருப்பூர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். பிரசவத்திற்காக, கயல்விழி திருப்பூர் மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குழந்தையின் உடலை தொப்புள் கொடி சுற்றியதால், கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.கடந்த சில தினங்களுக்கு முன், குழந்தை பிறந்த நிலையில், நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பணிபுரிந்த இடத்தில் வேலை இல்லாததாலும், மூணாறில் வீட்டை இழந்த நிலையிலும், எங்கு செல்வதென்று தெரியாமல், கோவை அரசு மருத்துவமனையில் தவித்தனர்.இதுகுறித்து கலெக்டர் ராஜாமணிக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர் வடக்கு தாசில்தார் மகேஷ்குமார் மூலம், 5 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். தொடர்ந்து, ஈரநெஞ்சம் அறக்கட்டளையில் தங்கவைக்க, அழைத்துச் செல்லப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X