பொது செய்தி

தமிழ்நாடு

மாத்துார் கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

Added : நவ 21, 2020
Share
Advertisement
கச்சிராயபாளையம்: மாத்துார் கிராமத்தில் சுகாதாரத் துறை சார்பில் சிறப்பு மருத்தவ முகாம் நடந்தது.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் பாலதண்டாயுதபாணி தலைமை தாங்கினார். டாக்டர் அர்ச்சனா முன்னிலை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகாலிங்கம் வரவேற்றார்.முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கான கர்ப்ப கால ஸ்கேன் பரிசோதனை, தொற்றா

கச்சிராயபாளையம்: மாத்துார் கிராமத்தில் சுகாதாரத் துறை சார்பில் சிறப்பு மருத்தவ முகாம் நடந்தது.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் பாலதண்டாயுதபாணி தலைமை தாங்கினார். டாக்டர் அர்ச்சனா முன்னிலை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகாலிங்கம் வரவேற்றார்.முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கான கர்ப்ப கால ஸ்கேன் பரிசோதனை, தொற்றா நோய் பரிசோதனை, காய்ச்சல், சளி, இருமல் மற்றும் காசநோய், தொழுநோய் பரிசோதனைகள், பிசியோதெரபி சிகிச்சை, கண், ரத்த பரிசோதனை, இ.சி.ஜி., ஸ்கேன், எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.ஆண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சையான வாசக்டமி குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.முகாமில் டாக்டர்கள் ஜெகதீசன், சவுந்தர்யன், அமுதன், தமிழ்ச்செல்வி, கிராமப்புற செவிலியர்கள், மருந்தாளுநர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், ஆய்வாளர்கள் என 500க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X