பொது செய்தி

தமிழ்நாடு

நாற்று வாங்குவதில் கவனம்: வேளாண் துறை 'அட்வைஸ்'

Added : நவ 21, 2020
Share
Advertisement
திருப்பூர்:வடகிழக்குப் பருவமழை பெய்துவரும் நிலையில், மாவட்டத்தில், விவசாயிகள், தென்னங்கன்று உள்ளிட்ட, பல்வேறு மரக்கன்றுகளை நட ஆர்வம் காட்டி வருகின்றனர்.இது குறித்து, விதை ஆய்வுத்துறையினர் கூறியதாவது:விவசாயிகளுக்கு, நாற்றுப்பண்ணைகள், தரமான நாற்றுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். தரமற்ற நாற்றுகளை நீக்க வேண்டும்.காய்கறிப்பயிர்களின் விதைகளை, குழித்தட்டுகளில்,

திருப்பூர்:வடகிழக்குப் பருவமழை பெய்துவரும் நிலையில், மாவட்டத்தில், விவசாயிகள், தென்னங்கன்று உள்ளிட்ட, பல்வேறு மரக்கன்றுகளை நட ஆர்வம் காட்டி வருகின்றனர்.இது குறித்து, விதை ஆய்வுத்துறையினர் கூறியதாவது:விவசாயிகளுக்கு, நாற்றுப்பண்ணைகள், தரமான நாற்றுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.
தரமற்ற நாற்றுகளை நீக்க வேண்டும்.காய்கறிப்பயிர்களின் விதைகளை, குழித்தட்டுகளில், விதைக்கும்போது, விதைக்குவியல் வாரியாக விதைப்பு செய்து, அதன் ரகத்தின் விவரம் குறித்த லேபிள் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். நாற்று முழுதும், விற்பனை செய்து, பட்டியலிடும் வரை, இதை, பராமரிக்க வேண்டும்.
நாற்று ரகம், உற்பத்தி திறன், ஆயுள் காலம் ஆகியவற்றை தெளிவாக விவசாயிகளுக்கு விளக்கி, நாற்றுப்பண்ணை உரிமையாளர்கள், நாற்றுகளை விற்க வேண்டும். நாற்று நடவு செய்யும் முறை, உரமிடுதல், பராமரிப்பு முறைகளை விளக்க வேண்டும்.உரிமம் இன்றி நாற்று விற்றால், சட்டப்படி நடவடிக்கை பாயும். உரிமம் பெற்ற நாற்றுப்பண்ணைகளில் மட்டுமே, விவசாயிகள் நாற்று வாங்க வேண்டும். அப்போதுதான், அதிக மகசூல் பெற முடியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X