சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுக்கடைக்கு எதிர்ப்பு: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

Added : நவ 21, 2020
Share
Advertisement
அனுப்பர்பாளையம்:பூலுவப்பட்டி அம்மன் நகரில் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பூர், பி.என்.ரோடு பூலுவப்பட்டி அம்மன் நகரில் இரண்டு 'டாஸ்மாக்' மதுக்கடைகள் செயல்படுகின்றன. தற்போது அதே பகுதியில் புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் நுாற்றுக்கு மேற்பட்டோர்,

அனுப்பர்பாளையம்:பூலுவப்பட்டி அம்மன் நகரில் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பூர், பி.என்.ரோடு பூலுவப்பட்டி அம்மன் நகரில் இரண்டு 'டாஸ்மாக்' மதுக்கடைகள் செயல்படுகின்றன. தற்போது அதே பகுதியில் புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் நுாற்றுக்கு மேற்பட்டோர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பொதுமக்கள் கூறியதாவது:அம்மன் நகர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில், ஏறத்தாழ, 350க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். இங்கு ஏற்கெனவே இரண்டு மதுக்கடை இருக்கும்போது, புதிதாக நேற்று முதல் இரவோடு இரவாக புதிய கடை திறக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே, செயல்பட்டு வரும் 'டாஸ்மாக்' கடைகளால் இப்பகுதியில் பெண்கள் குழந்தைகள் மிகவும் அவதிப்பட்டு வரும் சூழ்நிலையில் தற்போது புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த கடைகளால் மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்னை அதிகரிக்கக்கூடும். எனவே, மாவட்ட நிர்வாகம் கடையை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றனர்.தகவலறிந்து சென்ற 'டாஸ்மாக்' அதிகாரிகள் மற்றும் திருமுருகன்பூண்டி போலீசார் பொதுமக்களிடம் பேசினர். கலெக்டர் மற்றும் 'டாஸ்மாக்' மண்டல மேலாளர், ஆகியோரிடம் மனு அளிக்கும்படி கேட்டு கொண்டனர். இதனால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X