பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி தொகுதி 330 பூத்களில்பெயர் சேர்த்தல், நீக்கல் முகாம்

Added : நவ 21, 2020
Share
Advertisement
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதிக்குட்பட்ட 330 பூத்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் முகாம் நேற்று நடந்தது.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், வருவாய் ஆய்வாளர் ராமசாமி, வி.ஏ.ஓ., அக்பர் பாஷா ஆகியோர் மேற்பார்வையில் நடந்த முகாமில், 18 வயது நிரம்பியவர்கள் தங்களுடைய பள்ளி, கல்லுாரி சான்றிதழ்கள், ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றின் நகலுடன்,

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதிக்குட்பட்ட 330 பூத்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் முகாம் நேற்று நடந்தது.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், வருவாய் ஆய்வாளர் ராமசாமி, வி.ஏ.ஓ., அக்பர் பாஷா ஆகியோர் மேற்பார்வையில் நடந்த முகாமில், 18 வயது நிரம்பியவர்கள் தங்களுடைய பள்ளி, கல்லுாரி சான்றிதழ்கள், ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றின் நகலுடன், படிவம் எண். 6ஐ பூர்த்தி செய்து புதிதாக விண்ணப்பித்தனர்.பட்டியலில் இறந்தவர்களின் பெயர் இருந்தால் படிவம் 7ஐ பூர்த்தி செய்து நீக்குவதற்கு விண்ணப்பிக்கப்பட்டது. திருத்தங்கள், புகைப்படம் மாற்றுதல் உள்ளிட்டவைகளுக்கு படிவம் எண்.8, தொகுதிக்குள் வேறு கிராமத்திற்கு குடிபெயர்ந்திருந்தால், மாறுதலுக்கான படிவம் எண்.8ஏ வழங்கப்பட்டது. முகாம் இன்றும் நடக்கிறது.டி.ஆர்.ஓ., சங்கீதா, சப் கலெக்டர் ஸ்ரீகாந்த், தாசில்தார் பிரபாகரன் ஆகியோர் மாடூர், வரதப்பனுார், மலைக்கோட்டாலம் ஆகிய ஓட்டுச்சாவடி மையங்களில் நடந்த முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X