பொது செய்தி

தமிழ்நாடு

மது கடைகளுக்கு வார விடுமுறை உண்டா?

Added : நவ 21, 2020
Share
Advertisement
சென்னை:அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடப்பதால், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின், படிப்படியாக மதுவிலக்கு என்ற அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், 'டாஸ்மாக்' கடைகளுக்கு, வார விடுமுறை விடப்படுமா என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனம், 5,330 கடைகள் வாயிலாக, மது வகைகளை விற்பனை செய்கிறது. மதியம், 12:00 முதல் இரவு, 10:00 மணி வரை செயல்படும் கடைகளில், தினமும்

சென்னை:அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடப்பதால், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின், படிப்படியாக மதுவிலக்கு என்ற அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், 'டாஸ்மாக்' கடைகளுக்கு, வார விடுமுறை விடப்படுமா என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனம், 5,330 கடைகள் வாயிலாக, மது வகைகளை விற்பனை செய்கிறது. மதியம், 12:00 முதல் இரவு, 10:00 மணி வரை செயல்படும் கடைகளில், தினமும் சராசரியாக, 100 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடக்கிறது.தற்போது, டாஸ்மாக் கடைகளுக்கு, திருவள்ளுவர் தினம், குடியரசு தினம் உட்பட, ஆண்டுக்கு எட்டு நாட்கள் மட்டுமே விடுமுறை உள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 2016 சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, மீண்டும் ஆட்சிக்கு வந்தால், படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த போவதாக அறிவித்தார். அதன்படி, மீண்டும் முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, காலை, 10:00 முதல் செயல்பட்டு வந்த மதுக்கடை நேரத்தை, மதியம், 12:00 முதல் இரவு, 10:00 மணி வரை குறைத்ததுடன், 500 மது கடைகளையும் மூட உத்தரவிட்டார்.

பின், 2017ல் முதல்வராக பொறுப்பேற்ற இ.பி.எஸ்., 500 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டார். அதற்கு அடுத்த ஆண்டுகளிலும், ஆண்டுக்கு, 500 மது கடைகள் மூட திட்டமிடப்பட்டது. இருப்பினும், தமிழக அரசின் நிதி நெருக்கடியால், திட்டமிட்டபடி மது கடைகள் மூடப்பட வில்லை.அடுத்த ஆண்டு, சட்டசபை தேர்தல் நடக்கிறது. எனவே, பெண்களின் ஓட்டுக்களை கவரும் வகையில், தற்போது, படிப்படியாக மதுவிலக்கு என்ற அறிவிப்பை செயல்படுத்த வேண்டிய அவசியம், அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், குறிப்பிட்ட எண்ணிக்கையில், மது கடைகள் மூடுவதை காட்டிலும், மது கடை செயல்படும் நேரம் குறைப்பு அல்லது வார விடுமுறை அளிப்பு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X