பொது செய்தி

தமிழ்நாடு

'பாக்கெட் சைஸ்' ஆதார் அட்டை: 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம்

Added : நவ 21, 2020
Share
Advertisement
திருப்பூர்:ஏ.டி.எம்.,கார்டு போன்ற பிளாஸ்டிக் ஆதார் அட்டையை, 'ஆன்லைன்' மூலம் பெறும் வசதியை, ஆதார் பதிவு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.மத்திய, மாநில அரசு திட்டங்களுக்கு, ஆதார் விவரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் பதிவு நிறுவனம், ஆண்டு முழுவதும், கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலங்களில், முகாம் நடத்தி வருகிறது.ஆதார் பதிவு, பதிவு திருத்தம் போன்ற
 'பாக்கெட் சைஸ்' ஆதார் அட்டை: 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம்

திருப்பூர்:ஏ.டி.எம்.,கார்டு போன்ற பிளாஸ்டிக் ஆதார் அட்டையை, 'ஆன்லைன்' மூலம் பெறும் வசதியை, ஆதார் பதிவு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.மத்திய, மாநில அரசு திட்டங்களுக்கு, ஆதார் விவரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் பதிவு நிறுவனம், ஆண்டு முழுவதும், கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலங்களில், முகாம் நடத்தி வருகிறது.ஆதார் பதிவு, பதிவு திருத்தம் போன்ற பணிகள், தினமும் நடக்கிறது. புதிதாக பதிவு செய்தாலும், திருத்தம் செய்தாலும், அதற்கான ஆதார் அட்டை, தபால் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. மொபைல் போனுக்கு தகவல் கிடைத்ததும், 'ஆன்லைன்' மூலமாகவும் பிரின்ட் செய்து பயன்படுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.ஆதார் அட்டை, கைக்கு அடக்கமாக வடிவமைக்கப்படுவதில்லை. சட்டை பாக்கெட் அல்லது பர்சில் வைத்துக்கொள்ள முடியாது. இத்தகைய பிரச்னையை பரிசீலித்த ஆதார் நிறுவனம், கைக்கு அடக்கமான, சிறிய பிளாஸ்டிக் ஆதார் அட்டையை, 'ஆன்லைன்' மூலம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.ஆதார் பதிவு அதிகாரிகள் கூறியதாவது:ஏ.டி.எம்., கார்டுகளை போல், கைக்கு அடக்கமான,பிளாஸ்டிக் ஆதார் அட்டையை, 50 ரூபாய் கட்டணத்தில் பெறலாம். uidai.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று, பிளாஸ்டிக் ஆதார் அட்டையை ஆர்டர் செய்யலாம்.அதற்கான கட்டணம், 50 ரூபாயை, 'ஆன்லைன்' மூலமாகவே செலுத்தி, ஆதார் விவரத்தை சரிபார்த்து ஒப்புதல் அளித்ததும், விரைவு தபால் மூலமாக, பிளாஸ்டிக் ஆதார் அட்டை அனுப்பி வைக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X