பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி சோதனை தமிழகத்தில் வெற்றி

Added : நவ 21, 2020
Share
Advertisement
சென்னை:''தமிழகத்தில் பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம், 5.5 சதவீதமாக குறைந்துள்ளது,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.சென்னை, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில், பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு வாரம், 15ம் தேதி முதல் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த வாரத்தின் இறுதி நாளான நேற்று முன்தினம், மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை

சென்னை:''தமிழகத்தில் பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம், 5.5 சதவீதமாக குறைந்துள்ளது,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

சென்னை, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில், பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு வாரம், 15ம் தேதி முதல் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த வாரத்தின் இறுதி நாளான நேற்று முன்தினம், மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்றார்.அப்போது, அவர் அளித்த பேட்டி:தமிழகம் முழுதும் உள்ள டாக்டர்கள், நர்சுகளின் சிறந்த பங்களிப்பினால், பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம், 5.5 சதவீதமாக குறைந்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம், 2030ம் ஆண்டு, நமக்கு நிர்ணயம் செய்த இலக்கை, 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே டாக்டர்கள், நர்சுகளின் உழைப்பின் காரணமாக எட்டியுள்ளோம்.தமிழகத்தில், 'கோவேக்சின், கோவிஷீல்டு' கொரோனா தடுப்பூசி பரிசோதனை வெற்றிகரமாக உள்ளது. உலகத்தில், தமிழகத்தில் தான், கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.

எனினும், பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்து வருகிறோம். அடுத்த இரண்டு மாதங்கள், நாம் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். பண்டிகை காலங்கள், பருவநிலை உள்ளிட்டவைகள் இருப்பதால், பொது மக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.இவ்வாறு, விஜயபாஸ்கர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X