பொது செய்தி

தமிழ்நாடு

கந்தசஷ்டி திருக்கல்யாண உற்சவம்: கோவில்களில் பக்தர்கள் பரவசம்

Added : நவ 21, 2020
Share
Advertisement
திருப்பூர்;கந்தசஷ்டி விழா நிறைவாக, ஸ்ரீ காளிக்குமாரசாமி கோவிலில், திருக்கல்யாண உற்சவ விழா விமரிசையாக நடைபெற்றது.கொரோனா தொற்று பரவலால், பல்வேறு வகையில் பாதிக்கப்பட்ட மக்கள், கந்தசஷ்டி விரதம் இருந்து முருகனை வழிபட்டனர். கோவில்களில் பக்தர்கள் காப்புக்கட்ட அனுமதி மறுத்தும் கூட, பக்தர்கள் விரதம் இருக்க அதிக ஆர்வம் செலுத்தினர்.வழக்கத்தைவிட, ஒவ்வொரு கோவிலிலும்,
 கந்தசஷ்டி திருக்கல்யாண உற்சவம்: கோவில்களில் பக்தர்கள் பரவசம்

திருப்பூர்;கந்தசஷ்டி விழா நிறைவாக, ஸ்ரீ காளிக்குமாரசாமி கோவிலில், திருக்கல்யாண உற்சவ விழா விமரிசையாக நடைபெற்றது.கொரோனா தொற்று பரவலால், பல்வேறு வகையில் பாதிக்கப்பட்ட மக்கள், கந்தசஷ்டி விரதம் இருந்து முருகனை வழிபட்டனர். கோவில்களில் பக்தர்கள் காப்புக்கட்ட அனுமதி மறுத்தும் கூட, பக்தர்கள் விரதம் இருக்க அதிக ஆர்வம் செலுத்தினர்.வழக்கத்தைவிட, ஒவ்வொரு கோவிலிலும், நுாற்றுக்கணக்கானோர் விரதம் மேற்கொண்டனர். நேற்று முன்தினம் மாலை, சூரசம்ஹாரம் நடைபெற்றது. சம்ஹார நிகழ்வுக்கு பிறகே, பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனர். விரதம் இருந்த பக்தர்களுக்கு, வாழைத்தண்டு பிரசாதம் வழங்கப்பட்டது.நேற்று, திருப்பூர் சுற்றுப்பகுதியில் உள்ள முருகன்கோவில்களில், திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. பழவஞ்சிபாளையம் காளிக்குமாரசாமி கோவிபில், வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு, அபிேஷகமும், சிறப்பு அலங்காரம் மற்றும் திருக்கல்யாண உற்சவம், மங்கலவாத்திய இசையுடன் நடந்தது.திருப்பூர் விஸ்வேஸ்வரர் சுவாமி கோவிலில் உள்ள சண்முக சுப்பிரமணியர், கொங்கணகிரி கந்தபெருமான் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், மலைக்கோவில் ஸ்ரீகுழந்தைவேலாயுதசாமி கோவில், விராலிக்காடு சென்னியாண்டவர், பூச்சக்காடு செல்வவிநாயகர் கோவில், சாமளாபுரம் சோழீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்பிரமணியர் கோவில் உள்ளிட்ட முருகர் கோவில்களில், திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.கடந்த, 15ம் தேதி முதல் விரதம் இருந்த பக்தர்கள், முருகப்பெருமானின் திருக்கல்யாண உற்வசத்தை கண்டு களித்தனர். தொடர்ந்து, தங்களது விரதத்தை நிறைவு செய்து, முருகனுக்கு படையலிட்டு வணங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X