பொது செய்தி

தமிழ்நாடு

காளான் அறுவடை பயிற்சி முகாம்

Added : நவ 21, 2020
Share
Advertisement
திண்டிவனம்: திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையத்தில் காளானில் அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள் குறித்த நேர்முக மற்றும் இணையதள பயிற்சி முகாம் நடந்தது.வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சீனி அன்புமணி தலைமை தாங்கி துவக்கவுரையாற்றினார். விஞ்ஞானி ஆறுமுகநாதன் பங்கேற்று, காளான் அறுவடை, குளிர்வித்தல், தரம் பிரித்தல், பேக்கிங், சேமிப்பு முறை மற்றும் மதிப்பு

திண்டிவனம்: திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையத்தில் காளானில் அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள் குறித்த நேர்முக மற்றும் இணையதள பயிற்சி முகாம் நடந்தது.வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சீனி அன்புமணி தலைமை தாங்கி துவக்கவுரையாற்றினார். விஞ்ஞானி ஆறுமுகநாதன் பங்கேற்று, காளான் அறுவடை, குளிர்வித்தல், தரம் பிரித்தல், பேக்கிங், சேமிப்பு முறை மற்றும் மதிப்பு கூட்டுதல் போன்ற தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.பயிற்சியில் வேளாண்மை அறிவியல் நிலைய முனைவர் தங்கேஸ்வரி காளான் அறுவடை குறித்தும், முனைவர் நீலாவதி காளான் சூப் மற்றும் காளான் ஊறுகாய் குறித்தும் செயல் விளக்கம் அளித்தனர். முகாமில் 80 பயனாளிகள் நேர்முகமாகவும், இணையதள வழியாகவும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X