பொது செய்தி

தமிழ்நாடு

இடையன்சாவடி துணை மின் நிலையம் அமைதி பேச்சுவார்த்தையில் இழுபறி

Added : நவ 21, 2020
Share
Advertisement
திண்டிவனம்,: இடையன்சாவடியில் துணை மின் நிலையம் அமைக்கும் பிரச்னை தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது.வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து குயிலாப்பாளையம், ஆரோவில், கோட்டக்கரை, முதலியார்சாவடி உள்ளிட்ட பகுதிகளுக்கு புதிய துணை மின் நிலையம் அமைக்கும் பணி இடையன்சாவடியில் நடக்கிறது.இதற்காக இடையன்சாவடி

திண்டிவனம்,: இடையன்சாவடியில் துணை மின் நிலையம் அமைக்கும் பிரச்னை தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது.வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து குயிலாப்பாளையம், ஆரோவில், கோட்டக்கரை, முதலியார்சாவடி உள்ளிட்ட பகுதிகளுக்கு புதிய துணை மின் நிலையம் அமைக்கும் பணி இடையன்சாவடியில் நடக்கிறது.இதற்காக இடையன்சாவடி விவசாய நிலப்பகுதி வழியாக டவர் அமைக்கும் பணியும், துணை மின் நிலைய கட்டடம் அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இப்பணியால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், துணை மின் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.பிரச்னை குறித்து நேற்று முன்தினம் இடையன்சாவடி மக்களிடையே சமரச கூட்டம், தாலுகா அலுவலகத்தில் நடந்தது. தாசில்தார் சங்கரலிங்கம், டி.எஸ்.பி., அஜய்தங்கம், கண்டமங்கலம் மின்துறை செயற்பொறியாளர் கோட்டையன், திருச்சிற்றம்பலம் கூட்ரோடு உதவி செயற்பொறியாளர் தங்க மாரியப்பன் மற்றும் டவர் அமைக்கும் பணி மேற்கொள்ளும் அதிகாரிகளும் பங்கேற்றனர்.ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த கூட்டத்தில் உடன்பாடு ஏற்படவில்லை. பொதுமக்களின் கோரிக்கையை கலெக்டருக்கு, அனுப்பி வைப்பதாக தாசில்தார் தெரிவித்தார். கூட்டத்தில் முடிவு எட்டப்படாமல் முடிந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X