பொது செய்தி

தமிழ்நாடு

மக்களின் கோரிக்கை ஏற்பு நீர்த்தேக்கத்தின் பெயர் மாற்றம்

Updated : நவ 22, 2020 | Added : நவ 22, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:பொது மக்களின் கோரிக்கையை ஏற்று, திருவள்ளூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டு உள்ள, புதிய நீர்த்தேக்கத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில், தேர்வாய் கண்டிகை மற்றும் கண்ணன் கோட்டை கிராமங்களில் உள்ள, இரண்டு ஏரிகளை இணைத்து, புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டு உள்ளது.இந்த நீர்த்தேக்கத்திற்காக, 800 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதை,

சென்னை:பொது மக்களின் கோரிக்கையை ஏற்று, திருவள்ளூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டு உள்ள, புதிய நீர்த்தேக்கத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில், தேர்வாய் கண்டிகை மற்றும் கண்ணன் கோட்டை கிராமங்களில் உள்ள, இரண்டு ஏரிகளை இணைத்து, புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நீர்த்தேக்கத்திற்காக, 800 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதை, தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் என, பொதுப்பணித் துறை அதிகாரிகள், திருவள்ளூர் மாவட்ட அதிகாரிகள் அழைத்து வந்தனர். அதனால், நீர்த்தேக்கம் அமைக்க இடம் கொடுத்த, கண்ணன் கோட்டை மக்கள் விரக்தி அடைந்தனர்.

தங்களின் ஊர் பெயரையும், நீர்த்தேக்கத்தில் இணைத்து பெருமை சேர்க்க வேண்டும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இது, முதல்வர் இ.பி.எஸ்., கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. இதைஅடுத்து, 'தேர்வாய் கண்டிகை - கண்ணன் கோட்டை நீர்த்தேக்கம்' என, பெயர் சூட்டப்பட்டுள்ளது.இது, கண்ணன் கோட்டை கிராம மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
22-நவ-202012:54:29 IST Report Abuse
Bhaskaran திட்டத்துக்கு இடம்தந்த விவசாயப்பெருங்குடிமக்களை நல்லவிதமாக பரிசு வழங்கி கவுரவிக்க வேண்டும் .இன்னும் பல நூறு ஆண்டுகள் சென்னையின் தாகம் தீர்க்கும் திட்டத்துக்கு இடம் அளித்த மகானுபாவர்கள் .எந்தரோ மகானுபாவுலு அந்தரிகி வந்தனமுலு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X