பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளகோவிலில் தெய்வீக தமிழ் சங்கம் துவக்க விழா...

Added : நவ 22, 2020
Share
Advertisement
வெள்ளகோவிலில் தெய்வீக தமிழ் சங்கம் துவக்க விழா, ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலில் நடந்தது. இந்துக்களிடம் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை, வீடு வீடாக சென்று பிரசாரம் செய்ய முடிவு செய்யப்பட்டது. பா.ஜ., பொறுப்பாளர் நாராயணசாமி, தெற்கு மாவட்ட பொது செயலாளர் கோடங்கி, நகர தலைவர் குணமூர்த்தி, செயலாளர் சாமிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.---பஸ்

வெள்ளகோவிலில் தெய்வீக தமிழ் சங்கம் துவக்க விழா, ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலில் நடந்தது. இந்துக்களிடம் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை, வீடு வீடாக சென்று பிரசாரம் செய்ய முடிவு செய்யப்பட்டது. பா.ஜ., பொறுப்பாளர் நாராயணசாமி, தெற்கு மாவட்ட பொது செயலாளர் கோடங்கி, நகர தலைவர் குணமூர்த்தி, செயலாளர் சாமிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.---பஸ் இயங்காததால் அவதிவெள்ளகோவிலில் இருந்து வள்ளியரச்சல், கம்பளியாம்பட்டி, சின்னத்தாராபுரம், திருமங்கலம், மயில்ரங்கம், வேலப்பநாய்க்கன்வலசு, முளையாம்பூண்டி, கண்ணபுரம் ஆகிய பகுதிகள் வழியாக செல்லும், டவுன் பஸ்கள் இயக்கப்படுவதிலலை. எனவே, காங்கயம் டிப்போ மேலாளர், உரிய நடவடிக்கை எடுத்து, பஸ் இயக்குவதற்கு ஆவண செய்ய வேண்டுமென, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.---கோவிலில் கும்பாபிேஷகம்வெள்ளகோவில், மொஞ்சனூர், காளிபாளையத்தில், சர்வ முகூர்த்த விநாயகர், கருப்பண்ணசுவாமி, சப்த கன்னிமார், பேச்சியம்மன் ஆகிய கோவில் கட்டி முடிக்கப்பட்டு, மஹாகும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவ மூர்த்திகளுக்கு மகாபிேஷகம், சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. முன்னதாக, கோவிலில் கோ பூஜையும் நடந்து. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.---நிர்வாக பயிற்சி வகுப்புஅவிநாசி ஒன்றியம், நடுவச்சேரி, முறியாண்டாம்பாளையம் மற்றம் மங்கரசு வலையபாளையம் ஊராட்சிகளின் தலைவர்கள், கிராம வளர்ச்சி திட்டக்கு குழு உறுப்பினர்களுக்கு, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பயிற்சி வகுப்பு நடந்தது.ஒன்றிய குழு தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்து பயிற்சியை துவக்கி வைத்தார். மாவட்ட முதன்மை பயிற்றுனர்கள் சுதா, மகேஸ்வரி ஆகியோர் திட்டங்கள் குறித்து விளக்கினர்.---தொழிற்சங்க ஆர்ப்பாட்டம்பல்லடம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன், தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற்சங்க தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார். கிளை செயலாளர் சிவசுப்பிரமணியன், கார்த்திகேயன் (சி.ஐ.டி.யு.,), செந்தில்குமார் (ஏ.ஐ.டி.யு.சி.,) முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. நிர்வாகிகள் பொங்குராஜ், பரமசிவம், கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.---நோய் அபாய எச்சரிக்கைதிருப்பூரில் உள்ள உழவர் சந்தை், புறநகரில் உள்ள காய்கறிச்சந்தைகள் மற்றும் கடைகளில் இருந்து காய்கறிக்கழிவுகள் ரோட்டோரம் அதிகளவில் கொட்டப்படுகிறது. அதை, துப்புரவுப்பணியாளர்கள் அகற்ற முடியாத நிலை உள்ளது. அதிகாரிகள் கூறுகையில், 'அழுகிய காய்கறிகள் மூலம் நோய் பரவ ஏதுவாகிறது. எனவே, அவற்றை பாதுகாப்பான முறையில் கழிவை அப்புறப்படுத்த வேண்டும்,' என்றனர்.---ரோட்டின் தரம் குறித்து ஆய்வுகாங்கயம் நெடுஞ்சாலைத் துறை உட் கோட்டத்துக்கு உட்பட்ட தாராபுரம் ரோடு, 45 லட்சம் ரூபாய் மதிப்பிலும், காசிலிங்கம்பாளையம் - செங்கோடம்பாளையம் ரோடு, 35 லட்சம் ரூபாய் மதிப்பிலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இவற்றின் தரத்தை நெடுஞ்சாலை துறை தரக்கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் செல்வகுமார், உதவி கோட்ட பொறியாளர் தங்கவேல் ஆகியோர் சென்று ஆய்வு செய்தனர்.---விபத்தில் வாலிபர் பலிஊத்துக்குளியை சேர்ந்தவர் மணிகண்டன், 28, பனியன் தொழிலாளி. ஊத்துக்குளியில் இருந்து குன்னத்துாருக்கு பைக்கில் சென்றார். மொபைல் போனில், பேசிக்கொண்டே சென்றதில், செங்கப்பள்ளி அருகே ரோட்டோரத்தில் இருந்த மைல்கல்லில் பைக் மோதியது. காயமடைந்த அவர், அவிநாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். குன்னத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.---கொப்பரை ஏலம் மந்தம்பொங்கலுார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு, இரண்டு வாரமாக கொப்பரை வரத்து மந்தமாகி உள்ளது. இந்த வார ஏலத்தில் ,இரண்டாம் தர கொப்பரை மட்டுமே வந்தது. ஆறு விவசாயிகள், 98 மூட்டை கொப்பரை கொண்டு வந்திருந்தனர். அதில், கொப்பரை கிலோ சராசரியாக, 103.50 ரூபாய்க்கு ஏலம் போனது. தொடர்ந்து மழை பெய்வதால், கொப்பரை உற்பத்தி தடைபட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.---ஆடுகளால் விபத்து அபாயம்வெள்ளகோவிலில், திருச்சி ரோட்டில் திரியும் ஆடுகளால், விபத்து அபாய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆடு வளர்ப்போர், ரோட்டோரங்களில் அவற்றை மேய விடுவதால், கடக்கும் போது டூவீலர் மற்றும் சக்கர வாகனங்களில் அவை அடிபட்டு இறக்க நேரிடுகிறது. டூவீலரில் செல்வோரும் காயமடைகின்றனர். எனவே, ரோட்டில் சுற்றித்திரியும் ஆடுகளின் உரிமையாளருக்கு, நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுக்க வேண்டும்.வெள்ளகோவிலில், திருச்சி ரோட்டில் திரியும் ஆடுகளால், விபத்து அபாய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆடு வளர்ப்போர், ரோட்டோரங்களில் அவற்றை மேய விடுவதால், டூவீலர் மற்றும் சக்கர வாகனங்களில் அவை அடிபட்டு இறக்க நேரிடுகிறது. டூவீலரில் செல்வோரும் காயமடைகின்றனர். எனவே, ரோட்டில் சுற்றித்திரியும் ஆடுகளின் உரிமையாளருக்கு, நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X