பொது செய்தி

தமிழ்நாடு

மரக்கன்று நடும் விழா

Added : நவ 22, 2020
Share
Advertisement
அவலுார்பேட்டை: மேல்மலையனுார் அடுத்த கொடுக்கன்குப்பம் ஏரிக்கரை பகுதியில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆயிரம் பனை மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.திண்டிவனம் சப் கலெக்டர் அனு, கொடுக்கன்குப்பம் ஏரிக்கரையிலும், மேல்மலையனுார் தாலுகா அலுவலக வளாகத்திலும் மரக்கன்றுகளை நட்டு விழாவை துவக்கி வைத்தார். வட்ட செயலாளர் குமரவேல்

அவலுார்பேட்டை: மேல்மலையனுார் அடுத்த கொடுக்கன்குப்பம் ஏரிக்கரை பகுதியில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆயிரம் பனை மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.திண்டிவனம் சப் கலெக்டர் அனு, கொடுக்கன்குப்பம் ஏரிக்கரையிலும், மேல்மலையனுார் தாலுகா அலுவலக வளாகத்திலும் மரக்கன்றுகளை நட்டு விழாவை துவக்கி வைத்தார். வட்ட செயலாளர் குமரவேல் வரவேற்றார்.மேல்மலையனுார் தாசில்தார் நெகருன்னிசா, சமூக பாதுகாப்பு தாசில்தார் செல்வகுமார், மண்டல துணை தாசில்தார் குபேந்திரன், தலைமையிடத்து துணை தாசில்தார் கிருஷ்ணதாஸ், தேர்தல் துணை தாசில்தார் வெங்கடேசன், சங்க மாவட்ட பொருளாளர் கேசவன், விக்கிரவாண்டி வட்ட தலைவர் சத்யசுந்தரம் முன்னிலை வகித்தனர்.விழாவில், வருவாய் ஆய்வாளர்கள் ஏழுமலை, தஸ்தகீர், மேல்புதுப்பட்டு விவேகானந்தர் நற்பணி மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.மாவட்ட துணைச் செயலாளர் காளிதாஸ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X