பொது செய்தி

தமிழ்நாடு

ஊரக வளர்ச்சிப்பணிகள் விரைவுபடுத்த 'அட்வைஸ்'

Added : நவ 22, 2020
Share
Advertisement
திருப்பூர்:மாவட்டத்தில்,கிராம மேம்பாட்டுக்கான பணிகளை விரைவுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஊரக வளர்ச்சித்துறையினர் கூறியதாவது:ஊரக வளர்ச்சித்துறை மூலம், திருப்பூர் மாவட்டத்தில், கிராமங்களை மேம்படுத்த பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.மழைநீர் வடிகால் அமைத்தல், குடிநீர் திட்டங்களை செயல்படுத்துதல், சாலை வசதி, தெருவிளக்கு அமைத்தல், பசுமை வீடு

திருப்பூர்:மாவட்டத்தில்,கிராம மேம்பாட்டுக்கான பணிகளை விரைவுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஊரக வளர்ச்சித்துறையினர் கூறியதாவது:ஊரக வளர்ச்சித்துறை மூலம், திருப்பூர் மாவட்டத்தில், கிராமங்களை மேம்படுத்த பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.மழைநீர் வடிகால் அமைத்தல், குடிநீர் திட்டங்களை செயல்படுத்துதல், சாலை வசதி, தெருவிளக்கு அமைத்தல், பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டுதல், தனி நபர் கழிப்பிடம் அமைத்தல், குக்கிராமங்களில் மேம்பாட்டுப்பணிகள், வேலை உறுதியளிப்பு திட்டப் பணிகள் உள்ளிட்டவை நடக்கின்றன.மேலும், 'ஜல் ஜீவன்' திட்டத்தின் கீழ், அனைவருக்கும் குடிநீர் கிடைப்பதற்காக, அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஊரக வளர்ச்சித்துறை மூலம், திட்டப்பணிகளை சிறப்பாகவும், குறித்த காலத்துக்குள் விரைவாகவும் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, ஊரக வளர்ச்சித்துறையினர் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X