பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்: கலெக்டர் ஆய்வு

Added : நவ 22, 2020
Share
Advertisement
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர் பட்டியல் திருத்த முகாமில் கலெக்டர் ஆய்வு செய்தார்.விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி முகாம் நேற்று முதல் துவங்கியது. நேற்று காலை கலெக்டர் அண்ணாதுரை, விக்கிரவாண்டி பேரூராட்சியில்அரசு மேல்நிலைப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, பெண்கள்உயர்நிலைப் பள்ளி ஆகிய முகாம்களில் திடீர் ஆய்வு செய்து, ஓட்டுச்சாவடி உள்ள

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர் பட்டியல் திருத்த முகாமில் கலெக்டர் ஆய்வு செய்தார்.விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி முகாம் நேற்று முதல் துவங்கியது. நேற்று காலை கலெக்டர் அண்ணாதுரை, விக்கிரவாண்டி பேரூராட்சியில்அரசு மேல்நிலைப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, பெண்கள்உயர்நிலைப் பள்ளி ஆகிய முகாம்களில் திடீர் ஆய்வு செய்து, ஓட்டுச்சாவடி உள்ள இடங்களில் முகாம்கள்அமைத்து பெயர் சேர்த்தல், நீக்கல், பிழைத்திருத்தம் போன்ற பணிகளை மேற்கொள்ளவேண்டும்.மேலும், அனைத்து ஓட்டுச்சாவடிகளில் நடைபெறும் இம்முகாம்களில் அனைத்துக் கட்சியைச் சேர்ந்த பூத் கமிட்டி ஏெஜட்டுகள் உடனிருக்கவேண்டும் என ஆலோசனை வழங்கினார்.பின்னர் முகாம்களில் பங்கேற்ற பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறிந்தார்.கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி சிங், ஆர்.டி.ஓ., ராஜேந்திரன், தாசில்தார் தமிழ்ச்செல்வி, தேர்தல் தனி தாசில்தார் வேலு,செயல் அலுவலர் ேஷக் லத்தீப், வருவாய் ஆய்வாளர் சார்லின், நகர அ.தி.மு.க., செயலாளர் பூர்ணராவ், துணைச் செயலாளர் சுப்ரமணி, வாசு, நிர்வாகி முகமது ெஷரீப், தி.மு.க., மாணவரணி அமைப்பாளர் யுவராஜ் மற்றும் கிராம உதவியாளர் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X