அரசியல் செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் சேர்க்கை முகாம்: அ.தி.மு.க., - தி.மு.க., அக்கறை

Added : நவ 22, 2020
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல், வெளியிடப்பட்டுள்ளது.இதன் தொடர்ச்சியாக, வாக்காளர் சேர்க்கை, நீக்கம், முகவரி மாற்றம், தொகுதி மாற்றம் தொடர்பாக மனு அளித்து, வாக்காளர் பட்டியலை இறுதி செய்ய, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான சிறப்பு முகாம் முதற்கட்டமாக, நேற்றும், இன்றும் நடைபெற உள்ளன.சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில்,

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல், வெளியிடப்பட்டுள்ளது.இதன் தொடர்ச்சியாக, வாக்காளர் சேர்க்கை, நீக்கம், முகவரி மாற்றம், தொகுதி மாற்றம் தொடர்பாக மனு அளித்து, வாக்காளர் பட்டியலை இறுதி செய்ய, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான சிறப்பு முகாம் முதற்கட்டமாக, நேற்றும், இன்றும் நடைபெற உள்ளன.சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகளும், சுறுசுறுப்பாக களத்தில் இறங்கியுள்ளன. அ.தி.மு.க., - தி.மு.க., உள்ளிட்ட கட்சி மேலிடங்கள், தங்கள் நிர்வாகிகள் மூலம், ஓட்டுச்சாவடி நிலைக்களப் பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்க அறிவுறுத்தியுள்ளன.இதை தொடர்ந்து, மாவட்ட வாரியாக மட்டு மல்லாது, தொகுதி, வார்டு வாரியாக ஆலோசனைக்கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. வாக்காளர் ஒருவரைக்கூட விடாமல், வாக்காளராக சேர்க்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதேசமயம், போலி வாக்காளர் சேர்க்கை உள்ளதா, வாக்காளர் தேவையின்றி நீக்கப்படுகின்றனரா போன்றவற்றில், அதிக அக்கறையுடன் செயல்படவும் தயாராகி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X