சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திண்டிவனத்தில் சாலை மறியல் எம்.எல்.ஏ., உட்பட 50 பேர் கைது

Added : நவ 22, 2020
Share
Advertisement
திண்டிவனம்: தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி கைதை கண்டித்து திண்டிவனத்தில் மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ., உட்பட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.நாகப்பட்டினத்தில் நேற்று 2ம் நாளாக அனுமதியின்றி பிரசாரம் செய்ததாக தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி கைது செய்யப்பட்டார்.இதை கண்டித்து நேற்று திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் தி.மு.க.,வினர் சீத்தாபதி சொக்கலிங்கம் எம்.எல்.ஏ.,

திண்டிவனம்: தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி கைதை கண்டித்து திண்டிவனத்தில் மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ., உட்பட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.நாகப்பட்டினத்தில் நேற்று 2ம் நாளாக அனுமதியின்றி பிரசாரம் செய்ததாக தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி கைது செய்யப்பட்டார்.இதை கண்டித்து நேற்று திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் தி.மு.க.,வினர் சீத்தாபதி சொக்கலிங்கம் எம்.எல்.ஏ., தலைமையில் மறியலில் ஈடுபட்ட, ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சொக்கலிங்கம்,மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமணன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஆதித்தன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரமேஷ், மரக்காணம் ஒன்றிய பொறுப்பாளர் பழனி, முன்னாள் கவுன்சிலர் சின்னதுரை, திண்டிவனம் நகர துணைச் செயலாளர் அசோக்குமார், மாவட்ட துணை அமைப்பாளர்கள் உட்பட 50 பேரை டி.எஸ்.பி., கணேசன் தலைமையிலான திண்டிவனம் டவுன் போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X