சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மறியல் செய்ய வந்த தி.மு.க.,வினர் போலீசை பார்த்ததும் மாயம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
மரக்காணம்: மரக்காணம் அடுத்த முருக்கேரியில் சாலை மறியல் செய்ய இருந்த தி.மு.க., வினர் திடீரென மாயமானதால் போலீசார் ஏமாற்றத்துடன் சென்றனர்.தி.மு.க., இளைஞரணி தலைவர் உதயநிதி திருக்குவளையில் அனுமதியின்றி தேர்தல் பிரசாரம் செய்ததால் போலீசார் அவரை கைது செய்தனர். இதனைக் கண்டித்து தி.மு.க.,வினர் நேற்று முன்தினம் மாலை முதல் பல்வேறு இடங்களில் சாலை மறியல் செய்து வருகின்றனர்.நேற்று

மரக்காணம்: மரக்காணம் அடுத்த முருக்கேரியில் சாலை மறியல் செய்ய இருந்த தி.மு.க., வினர் திடீரென மாயமானதால் போலீசார் ஏமாற்றத்துடன் சென்றனர்.தி.மு.க., இளைஞரணி தலைவர் உதயநிதி திருக்குவளையில் அனுமதியின்றி தேர்தல் பிரசாரம் செய்ததால் போலீசார் அவரை கைது செய்தனர். இதனைக் கண்டித்து தி.மு.க.,வினர் நேற்று முன்தினம் மாலை முதல் பல்வேறு இடங்களில் சாலை மறியல் செய்து வருகின்றனர்.நேற்று மரக்காணம் நகர செயலாளர் ரவிகுமார் தலைமையில் மரக்காணத்திலும், ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமையில் முருக்கேரியிலும் சாலை மறியல் செய்ய உள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர்.அதன்படி மரக்காணத்தில் நகர செயலாளர் ரவிகுமார் தலைமையில் 50 பேர் சாலை மறியல் செய்தனர். உடனே அவர்களை போலீசார் கைது செய்தனர்.முருக்கேரியில் சாலை மறியல் செய்யும் தி.மு.க., வினரை கைது செய்ய பிரம்மதேசம் போலீசார் தயார் நிலையில் இருந்தனர். ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமையில் வந்த தி.மு.க.,வினர் போலீசாரை பார்த்ததும் சாலை மறியல் செய்யாமல் திடீரென மாயமாயினர். இதனால் போலீசார் கைது நடவடிக்கை எதுவும் இன்றி ஏமாற்றத்துடன் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X