பொது செய்தி

தமிழ்நாடு

கட்டட வரன்முறை கட்டணம்...பரிவர்த்தனை! வங்கி கணக்கில் வரவு வைக்கலாமே!

Added : நவ 22, 2020
Share
Advertisement
திருப்பூர்;வீட்டுமனை வரன்முறை கட்டணத்தை, வங்கிக்கணக்கு மூலம் பரிவர்த்தனை செய்ய வேண்டுமென, ஊராட்சி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.மாநில அரசின் வழிகாட்டுதல் படி, அங்கீகாரமற்ற வீட்டுமனை பிரிவுகள், கட்டண அடிப்படையில் வரன்முறை செய்யப்படுகின்றன. ஏற்கனவே, கிரையம் செய்யப்பட்ட மனைகளுக்கும், கட்டணம் செலுத்தி, மனை உரிமையாளர்கள், வரன்முறை செய்கின்றனர். இப்பணிக்கென,

திருப்பூர்;வீட்டுமனை வரன்முறை கட்டணத்தை, வங்கிக்கணக்கு மூலம் பரிவர்த்தனை செய்ய வேண்டுமென, ஊராட்சி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.மாநில அரசின் வழிகாட்டுதல் படி, அங்கீகாரமற்ற வீட்டுமனை பிரிவுகள், கட்டண அடிப்படையில் வரன்முறை செய்யப்படுகின்றன. ஏற்கனவே, கிரையம் செய்யப்பட்ட மனைகளுக்கும், கட்டணம் செலுத்தி, மனை உரிமையாளர்கள், வரன்முறை செய்கின்றனர்.
இப்பணிக்கென, நகர் ஊரமைப்பு துறைக்கு, கூராய்வு கட்டணமாக, 500 ரூபாய் செலுத்தப்படுகிறது.அவர்கள், மனையிடத்தை ஆய்வு செய்து அங்கீகாரம் வழங்குகின்றனர். அதன்பின், அரசுக்கும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புக்கும், சதுரடி அடிப்படையில் கட்டணம் செலுத்துகின்றனர். தனித்தனி வங்கி கணக்கு மூலம், கட்டணம் செலுத்தப்படுகிறது.தனி அலுவலர் பொறுப்பில் இருந்த வரை, அந்தந்த ஊராட்சிக்கு சேர வேண்டிய, கட்டண தொகை வழங்கப்படாமல் இருந்தது.ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின், கட்டணம் செலுத்துவோருக்கு, சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவர்களே, அங்கீகாரம் வழங்குகின்றனர். இருப்பினும், ஊராட்சிகளுக்கென அவர்கள் செலுத்தும் கட்டணம், நேரடியாக, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகம் பராமரிக்கும் வங்கி கணக்கிற்கு செல்கிறது.குறிப்பிட்ட கால இடைவெளியில், வங்கி கணக்கில் உள்ள தொகையை சரிபார்த்து, அந்தந்த ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டுமென, அரசு உத்தரவிட்டுள்ளது.ஊராட்சி தலைவர்கள் கூறியதாவது:தற்போதைய தொழில் நுட்பயுகத்தில், 'டிஜிட்டல்' முறையில், எளிதாக, வங்கிக்கணக்கில் உள்ள தொகையை, ஊராட்சி வங்கி கணக்கிற்கு பரிவர்த்தனை செய்ய முடியும்.
மாறாக, வங்கியில் உள்ள பணத்துக்கு, 'டிடி' எடுத்து, அதை ஊராட்சிகளுக்கு வழங்கப்படுகிறது.இந்த நடைமுறையில், பல்வேறு குளறுபடி நடப்பதாகவும், நடைமுறை சிக்கல் ஏற்படுவதாகவும், எனவே, ஊராட்சிக்கு சேர வேண்டிய பணத்தை, நேரடியாக ஊராட்சி வங்கி கணக்கிற்கு பரிவர்த்தனை செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறுகையில்,''ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வீண் குழப்பம் தவிர்க்க, ஊராட்சி வங்கி கணக்கிற்கு நேரடியாக பரிவர்த்தனை செய்ய உத்தரவிடப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X