பொது செய்தி

தமிழ்நாடு

கார்த்திகையை முன்னிட்டு தீப விளக்குகள் விற்பனை ஜோர்

Added : நவ 22, 2020
Share
Advertisement
ராமநாதபுரம் : கார்த்திகையை முன்னிட்டு, ராமநாதபுரத்தில்குஜராத் பீங்கான் தீப விளக்குகள், மண்விளக்குகள் விற்பனை களைக்கட்டியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை பிறப்பு முதல் கோயில்கள், வீடுகள், வணிக நிறுவனங்களில் தினமும் தீபவிளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். நவ.,29 ல் பவுர்ணமி அன்று பெரிய கார்த்திகை கொண்டாடப்படுகிறது.இதனை முன்னிட்டு ராமநாதபுரம் பகுதியில் குஜராத்தில்

ராமநாதபுரம் : கார்த்திகையை முன்னிட்டு, ராமநாதபுரத்தில்குஜராத் பீங்கான் தீப விளக்குகள், மண்விளக்குகள் விற்பனை களைக்கட்டியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை பிறப்பு முதல் கோயில்கள், வீடுகள், வணிக நிறுவனங்களில் தினமும் தீபவிளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். நவ.,29 ல் பவுர்ணமி அன்று பெரிய கார்த்திகை கொண்டாடப்படுகிறது.இதனை முன்னிட்டு ராமநாதபுரம் பகுதியில் குஜராத்தில் தயாரிக்கப்படும் பளிங்கு கற்களால்செய்யப்பட்ட அழகியதேங்காய் விளக்கு, விநாயகர் விளக்கு, மங்கைவிளக்கு, அன்னம்ஆகிய விளக்குககளை விருதாச்சலம், கடலுாரைச் சேர்ந்த வியாபாரிகள் பஸ் ஸ்டாண்ட், கலெக்டர் அலுவலக ரோடு, சந்தைபகுதியில் விற்கின்றனர்.

விருத்தாச்சலம் வியாபாரி குழந்தைவேல் கூறுகையில், 'கார்த்திகை விழாவிற்காக பளிங்கு கற்களால் செய்யப்பட்ட அகல்விளக்குகள் ஜோடி ரூ.50 முதல் ரூ.200 வரை விற்கிறோம். இதேபோல மண்ணில் செய்த பலவிதமான விளக்குகளும் ரூ.50 முதல் ரூ.150 வரை உள்ளது. அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய பீங்கான் வீட்டு உபயோகப் பொருட்கள், பரிசுப் பொருட்களை மக்கள் ஆர்வத்துடன் வாங்குகின்றனர்,' என்றார்.----

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X