சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வினர் சாலை மறியல்..

Added : நவ 22, 2020
Share
Advertisement
செஞ்சி: செஞ்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.,வினர் 33 பேரை போலீசார் கைது செய்தனர்.தி.மு.க., இளைஞர் அணி தலைவர் உதயநிதி, நேற்று இரண்டாவது நாள் பிரசாரமாக நாகையில் மீனவர்களிடையே பிரசாரம் செய்தார். அவரை போலீசார் மீண்டும் கைது செய்தனர்.இதனை கண்டித்து செஞ்சி அடுத்த பெருங்காப்பூர் கூட்ரோட்டில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த் தலைமையில் தி.மு.க.,

செஞ்சி: செஞ்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.,வினர் 33 பேரை போலீசார் கைது செய்தனர்.தி.மு.க., இளைஞர் அணி தலைவர் உதயநிதி, நேற்று இரண்டாவது நாள் பிரசாரமாக நாகையில் மீனவர்களிடையே பிரசாரம் செய்தார். அவரை போலீசார் மீண்டும் கைது செய்தனர்.இதனை கண்டித்து செஞ்சி அடுத்த பெருங்காப்பூர் கூட்ரோட்டில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த் தலைமையில் தி.மு.க., வினர் சாலை மறியல் செய்தனர்.இதனால் செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் போக்குவரத்து பாதித்தது. இதையடுத்து சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் தங்க குருநாதன் மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்ட ஆனந்த் உட்பட 33 பேரை கைது செய்தனர்.திருவெண்ணெய்நல்லுார்அரசூர் கூட்ரோடு சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பகல் 1:50 மணியளவில் தி.மு.க., வினர் ஒன்றிய பொறுப்பாளர் சந்திரசேகரன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் அவர்களை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X