பொது செய்தி

தமிழ்நாடு

நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்: மவுனம் காக்கும் அதிகாரிகள்

Added : நவ 22, 2020
Share
Advertisement
திருப்பூர்:மங்கலம் பகுதியில், ரோடு பராமரிக்கப்படாததால், விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.திருப்பூர், பல்லடம், அவிநாசி, சோமனுார் ரோட்டை இணைக்கும் பகுதியாக, மங்கலம் அமைந்துள்ளது. இதனால், திருப்பூர் நகர பகுதிக்கு இணையான வாகன நெருக்கடி ஏற்படுகிறது. மங்கலம் நால்ரோடு பகுதியில், ஆக்கிரமிப்புகள் அதிகளவில் உள்ளன.மாநில நெடுஞ்சாலை ரோட்டை ஆக்கிரமித்து, கடைக்காரர்கள் 'ெஷட்'
 நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்: மவுனம் காக்கும் அதிகாரிகள்

திருப்பூர்:மங்கலம் பகுதியில், ரோடு பராமரிக்கப்படாததால், விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.திருப்பூர், பல்லடம், அவிநாசி, சோமனுார் ரோட்டை இணைக்கும் பகுதியாக, மங்கலம் அமைந்துள்ளது. இதனால், திருப்பூர் நகர பகுதிக்கு இணையான வாகன நெருக்கடி ஏற்படுகிறது. மங்கலம் நால்ரோடு பகுதியில், ஆக்கிரமிப்புகள் அதிகளவில் உள்ளன.மாநில நெடுஞ்சாலை ரோட்டை ஆக்கிரமித்து, கடைக்காரர்கள் 'ெஷட்' அமைத்துள்ளனர். பயணிகளுக்காக அமைக்கப்பட்ட நிழற்குடைகளும், மளிகை கடைகளாக மாறியுள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மட்டுமே நெரிசல் குறையும்என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.மெயின் ரோட்டில், டூ வீலர்கள் இரு வரிசையில் பார்க்கிங் செய்யப்படுவதால், எஞ்சிய குறுகிய ரோட்டில் தான் வாகனங்கள் பயணிக்க வேண்டியிருக்கிறது. ரோட்டின் பல இடங்களில் ஏற்பட்ட சிறு குழியால், கனரக வாகனங்களே இந்த ரோட்டில் பயணிப்பது கடினம் என்ற சூழலில், டூ வீலர் ஓட்டிகளின் நிலை மிகவும் பரிதாபம்.எனவே, நெடுஞ்சாலை மற்றும் வருவாய் துறையினர் கூட்டாக களமிறங்கி, மங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் இருந்து, நால்ரோடு வரையுள்ள, நெடுஞ்சாலை ரோட்டை அகலப்படுத்தும் பணியை துரிதப்படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X