சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இலவச பிராந்தி கேட்டு மிரட்டல் விடுத்தவர் கைது

Added : நவ 22, 2020
Share
Advertisement
செஞ்சி; டாஸ்மாக் கடையில் இலவசமாக பிராந்தி கேட்டு தகராறு செய்து, போலீசை திட்டி, கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.செஞ்சி அடுத்த கடலாடிகுளம் கிராமத்தில் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைக்கு வந்த சே.பேட்டை கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 42; டாஸ்மாக் மேற்பார்வையாளர் ஏழுமலையிடம், இலவசமாக குவார்ட்டர் பிராந்தி கேட்டார்.அவர் தர மறுத்ததால், காலி பீர் பாட்டிலை

செஞ்சி; டாஸ்மாக் கடையில் இலவசமாக பிராந்தி கேட்டு தகராறு செய்து, போலீசை திட்டி, கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.செஞ்சி அடுத்த கடலாடிகுளம் கிராமத்தில் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைக்கு வந்த சே.பேட்டை கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 42; டாஸ்மாக் மேற்பார்வையாளர் ஏழுமலையிடம், இலவசமாக குவார்ட்டர் பிராந்தி கேட்டார்.அவர் தர மறுத்ததால், காலி பீர் பாட்டிலை உடைத்து கொலை மிரட்டல் விடுத்து கடையின் கேட்டையும் மூடி தகராறு செய்தார். தகவலறிந்து வந்த போலீஸ்காரர் செல்வம், கிருஷ்ணமூர்த்தியை கண்டித்து அனுப்பினார்.இந்நிலையில், நேற்று காலை கடலாடிகுளம் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த போலீஸ்காரர் செல்வத்தை அங்கு வந்த கிருஷ்ணமூர்த்தி ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார்.டாஸ்மாக் மேற்பார்வையாளர் ஏழுமலை, போலீஸ்காரர் செல்வம் ஆகியோர் தனித்தனியே கொடுத்த புகார் மீது நல்லான்பிள்ளை பெற்றாள் போலீசார் வழக்குப்பதிந்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X