பொது செய்தி

தமிழ்நாடு

தயாரிப்பாளர் சங்க தேர்தல் ரத்தாகுமா?

Added : நவ 22, 2020
Share
Advertisement
சென்னை:தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில், ஓட்டுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதால், தேர்தல் ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல், இன்று நடக்க உள்ளது. 1,312 உறுப்பினர்கள் பங்கேற்கும் இத்தேர்தலில், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் என, ஆயிரக்கணக்கில் செலவிடுவதாக, தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ் புகார்

சென்னை:தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில், ஓட்டுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதால், தேர்தல் ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல், இன்று நடக்க உள்ளது. 1,312 உறுப்பினர்கள் பங்கேற்கும் இத்தேர்தலில், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் என, ஆயிரக்கணக்கில் செலவிடுவதாக, தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ் புகார் கூறியுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலை மிஞ்சும் அளவுக்கு, 32 அங்குலம் எல்.இ.டி., 'டிவி' போன்றவை கூட வழங்குவதாக தெரிகிறது.

இது குறித்து, சதீஷ் கூறியுள்ளதாவது:ஓட்டுக்கு அதிகபட்சம், 25 ஆயிரம் ரூபாய் தருகின்றனர்; மளிகை பொருட்கள் வழங்குகின்றனர். 'டிவி' தருவதாக, 'வாட்ஸ் ஆப்'பில் பிரசாரம் செய்கின்றனர். இதையெல்லாம் பார்க்கும் போது, நியாயமாக தேர்தல் நடப்பதாக தெரிய வில்லை. அதிகாரத்திற்கு வருவது சேவை செய்யவே. இவ்வளவு செலவு செய்து வந்தால், செய்த செலவை விட, அதிகம் சம்பாதிக்கவே விரும்புவர். தயாரிப்பாளர்கள் பலர் பணம் வாங்காமல் உள்ளனர். சிலர் அனைவரிடமும் பணம் வாங்குகின்றனர். பணம் வாங்கிக் கொள்ளுங்கள்; ஆனால், சிந்தித்து வாக்களியுங்கள்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X