சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு ஊழியர் வீட்டில் திருட்டு மர்ம நபருக்கு போலீஸ் வலை

Added : நவ 22, 2020
Share
Advertisement
விழுப்புரம்; வளவனுாரில் அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.வளவனுார் பகுதியைச் சேர்ந்தவர் சேகர், 57; இவர், புதுச்சேரியில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், தனது மனைவியோடு கடந்த 19ம் தேதி வீட்டை பூட்டிக் கொண்டு, திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அரும்பட்டு கிராமத்தில் உள்ள தனது மகன்

விழுப்புரம்; வளவனுாரில் அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.வளவனுார் பகுதியைச் சேர்ந்தவர் சேகர், 57; இவர், புதுச்சேரியில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், தனது மனைவியோடு கடந்த 19ம் தேதி வீட்டை பூட்டிக் கொண்டு, திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அரும்பட்டு கிராமத்தில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றிருந்தார்.நேற்று மதியம் வீட்டிற்கு வந்து பார்த்த போது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த 12 சவரன் நகை, 300 கிராம் வெள்ளி மற்றும் 7,000 ரூபாய் திருடு போயிருப்பது தெரியவந்தது.வளவனுார் போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X