சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணின் செயின் பறிப்பு: பட்டப்பகலில் துணிகரம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
விழுப்புரம்; விழுப்புரத்தில் பட்டப்பகலில் ஆசிரியர் மனைவியின் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் அடுத்த அனந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார், 57; முட்டத்துார் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று மதியம் 2:15 மணிக்கு, தனது மனைவி லாவண்யாவோடு, விழுப்புரத்தில் தனியார் மருத்துவமனைக்குச்

விழுப்புரம்; விழுப்புரத்தில் பட்டப்பகலில் ஆசிரியர் மனைவியின் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் அடுத்த அனந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார், 57; முட்டத்துார் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று மதியம் 2:15 மணிக்கு, தனது மனைவி லாவண்யாவோடு, விழுப்புரத்தில் தனியார் மருத்துவமனைக்குச் சென்று, பைக்கில் வீடு திரும்பினார்.பூந்தோட்டம் பாதை அருகே சென்ற போது, பின் தொடர்ந்து பைக்கில் ெஹல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் இருவர், லாவண்யா கழுத்தில் அணிந்திருந்த 12 சவரன் செயினை பறித்துச் சென்றனர். பட்டப் பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X